பிரபல டிவி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்க்கு தவளையால் வந்த சோதனை

Date:

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சி நம்மில் அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் இருந்தபடியே அமேசானின் மழைக்காடுகளைப் பற்றியும், சஹாராவின் வெம்மையையும், எலும்பை உருக்கும் ஆர்டிக் மண்டலத்தின் குளிர் பற்றியும் தெரிந்துகொள்ள இம்மாதிரி நிகழ்ச்சிகளைவிட்டால் வேறு வழியுமில்லை. அதிலும் குறிப்பாக பியர் கிரில்சின் த்ரில் மிகுந்த பயண வரலாறுகளைக் காணவே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. சூழலின் தன்மையைப் பொறுத்து வாழும் கலையினை கிரில்ஸ் இந்நிகழ்ச்சியின் மூலமாக முன்வைக்கிறார். மனிதர்களே இல்லாத இடத்தில் இயற்கையோடு மோதி உயிர்பிழைத்தல் தான் நிகழ்ச்சியின் கரு. இதற்காக உலகின் அதிபயங்கர இடங்களுக்கெல்லாம் அவருடைய குழு பயணிக்கிறது.

obama-running-wild-
Credit: CNN

சில நேரங்களில் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதுண்டு. 2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவே இந்நிகழ்ச்சியில் தோன்றி அசத்தினார். கிரில்சின் பல்கேரியா பயணத்திற்கு அமெரிக்காவின் பிரபல நடன கலைஞரான Derek Hough சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் அந்த சிக்கலும் வந்தது.

தவளை

காட்டில் வசிக்கும் பல்வேறு வகையான விலங்குகள் மற்று பறவையினை வேட்டையாடி தனது உணவினைத் தயாரிப்பார் கிரில்ஸ். அதற்காக அவர் உபயோகிக்கும் வழிமுறைகள் பலரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். அவருடைய வழயில் இடைமறிக்கும் எந்த உயிரினமும் உணவுப்பட்டியலில் இடம்பெறும். சில சமயங்களில் ஆக்டோபஸ், பாம்பு என அதிர்ச்சியளிக்கவும் தயங்கமாட்டார். இப்படித்தான் தலைவர் பல்கேரியா நாட்டில் உள்ள காடு ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். வழக்கம் போல கிரில்சுக்கு பசியெடுக்கும் நேரத்திற்கு தவளை ஒன்று எட்டிப்பார்த்திருக்கிறது. முடிந்தது கதை. அதை எப்படி சாப்பிடவேண்டும் என கிளாஸ் எடுத்தார் கிரில்ஸ். சிறப்பு விருந்தினரான Derek Hough ம் இதற்காக தீமூட்டி அந்தத் தவளையை சமைத்திருக்கின்றனர்.

bear-grylls-derek-hough-file-restricted
Credit: CNN

அபராதம்

இந்த நிகழ்ச்சி வெளிவந்த பின்னர் பல்கேரிய அரசு கிரில்ஸ் மேல் வழக்குத் தொடுத்திருக்கிறது. அங்குள்ள கரகஷேவோ ஏரியில் (Karakashevo lake) அனுமதியின்றி நீந்தியது, வனப்பகுதியில் தீமூட்டியது, விலங்குகளை வேட்டையாடியது (தவளை) என கிரில்சின் குழுமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக 4 லட்சம் வரை அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என பல்கேரிய அரசு தெரிவித்திருக்கிறது.

முதல்முறை அல்ல

பியர் கிரில்ஸ் இப்படி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறையல்ல. சர்வதேச மனிதநேய அமைப்பின் இயக்குனராக இருக்கும் Claire Bass தனிப்பட்ட பொருளாதார காரணங்களுக்காக விலங்குகளைக் கொல்வது கண்டிக்கத்தக்கது என ஒருமுறை கிரில்சை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறார். சென்ற வருடம் David Attenborough என்னும் சூழியல் வல்லுனர்கள் கிரில்ஸ் இயற்கைக்கு ஒரு நாள் நிச்சயம் பதில் கூறவேண்டும் என்றார். இப்படி எதிர்ப்பவர்களுக்கு மத்தியில் அபரிமிதமான ஆதரவாளர்கள் பியர் கிரில்சுக்கு உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!