ஆப்பிள் நிறுவனம் இன்று இரவு புதிதாக வெளியிடப்போவது என்ன?
தமிழ் இணைய உலகில் முதல்முறையாக ஆப்பிள் நிகழ்ச்சி நேரடியாக தமிழில் வருகிறது.
@Apple fan boys – நமது தளத்தில் ஆப்பிள் புதிய ஐபோன், ஐபேட் மேலும் பலவற்றை வெளியிடும் நிகழ்ச்சியை இனிமையான நமது தமிழ் மொழியில் படித்து மகிழுங்கள்.
இந்நிகழ்ச்சி பற்றி மேலும் சில முன்னோட்டங்கள் இங்கே உங்களுக்காக.
இந்த ஆப்பிள் சாதன (Gadgets) வெளியீட்டு நிகழ்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
முதல்முறையாக இந்நிகழ்வு கல்வியை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய புதிய அறிவிப்புகள் நிறுவனத்திடமிருந்து வரவிருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த கூடிய புதிய ஐபேட், கூகிள் க்ரோம்புக் (Chromebook) க்கு போட்டியாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் புதிய வரவுகள் என்னென்ன ?
- புதிய ஐபோன் (iPhone-X-SE)
- புதிய விலை குறைந்த ஐபேட் (iPad)
- பிற ஐபேட்(iPad) கூட பயன்படுத்தும் வகையிலான, விலை குறைவான ஆப்பிள் பென்சில் (Apple Pencil)
- புதிய மேக்புக் ஏர் (Macbook Air),
- பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தத்தக்க, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பொருட்கள்
- மென்பொருள் இற்றையாக்கம் (Updates)
இந்த நிகழ்ச்சியின் நேரடி வலைப்பதிவை காண கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
புதிய ஐபோன், ஐபேட் வேறு என்ன வெளியிடப்போகிறது ஆப்பிள்? LiveBlog Stream