பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரால் +11 ரக வைரங்கள் அதிகளவு வாங்கப்பட்டதாகவும், பின்னர் அதனை குறைவான விலைக்கு விற்றதால் இந்தியாவின் மிகப்பெரிய வைர சந்தையான சூரத் தற்போது நடுங்கிக்கொண்டிருக்கிறது.
பிரபல ஆங்கில இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டது. எப்படி இந்த பிரம்மாண்ட வர்த்தகம் நடந்தது.
நவம்பர் 8 ஆம் தேதியை எந்த இந்தியனாலும் அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஒரே இரவில் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ATM வாசலில், வங்கியில் கூட்டம் அலைமோதியது. ஆனால் பணம் தான் பத்தும் செய்யுமே? பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே இத்திட்டம் பெரும் தலைகளின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது.
வைரங்களில் சிவப்பு நிற வைரங்களே அபூர்வமானதாக கருதப்படுகின்றன.
பணம் செல்லாது. வங்கியில் போட முடியாது. கடன்கொடுக்க முடியாது. என்னதான் செய்வது? எல்லோரும் என்ன செய்வோமோ அதைத்தான் அந்த கும்பலும் செய்திருக்கிறது. மொத்த பணத்திற்கும் விலையுயர்ந்த +11 வைரங்களை வாங்கியிருக்கிறார்கள். எவ்வளவுக்கு தெரியுமா? 2 லட்சம் கேரட்!!
கேரட்
கேரட் என்பது வைரத்தின் அளவைப் பொறுத்தது அல்ல. அதன் எடையைப் பொறுத்ததாகும். 200 மில்லிகிராம் எடை கொண்ட வைரத்தினை ஒரு கேரட் என்பார்கள்.

வைரத்தினை அதன் நிறம், பட்டை தீட்டப்பட்ட முறை, ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். அளவு வகையினைப் பொறுத்து வைரங்கள் வகைப்படுத்தப்படும்போது ஒரு விதமான சல்லடையைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு அளவிற்கும் ஒவ்வொரு எண் இருக்கிறது. வைரங்களின்அளவைப்பொறுத்து இந்த சல்லடைகளின் எண்ணும் மாறுபடும். உதாரணமாக 11 முதல் 14 வரை அளவுள்ள வைரங்களை +11 வைரம் என்கிறார்கள்.
அழுத்தம்
பூமிக்கடியில் இருக்கும் அதீத அழுத்தத்தின் காரணமாக கார்பன் மூலக்கூறுகள் ஒன்றிணைந்து வைரங்கள் உருவாகின்றன. இந்த அழுத்தத்தின் அளவைப்பொறுத்து வைரங்களின் நிறங்களும் இருக்கின்றன. அதேபோல் செயற்கையான ஆராய்ச்சியின் பயனாகவும் வைரத்தின் நிறத்தினை மாற்ற இயலும்.

எவ்வித மாசும் இல்லாத வைரங்கள் நிறமற்றவையாக இருக்கும். அதாவது வெள்ளை நிறத்தில் இருக்கும். மற்ற நிறமுடைய வைரம் அனைத்தும் ஏதோ ஒருவகையில் மாசுக்களை கொண்டிருக்கும். வைரங்களில் சிவப்பு நிற வைரங்களே (red diamonds) அபூர்வமானதாக கருதப்படுகின்றன.
வீழ்ச்சி
அப்போது வாங்கிய வைரத்தினை குறைந்த விலைக்கு அந்த கும்பல் விற்பதால் 30% வரை சந்தை நஷ்டத்தை சந்தித்திருக்கிறதாம். உலக அளவில் பிரசித்தி பெற்ற சூரத்தையே கவிழ்த்திருக்கும் இந்த விற்பனையின் மூலம் வந்த பணம் எல்லாம் வரும் மக்களவைத் தேர்தலில் புழக்கத்திற்கு வரும் என்கிறார்கள் வியாபாரிகள்.