இந்திய ரயில்வேயின் புது அவதாரம் ‘ஸ்மார்ட் டிரெயின்’ பற்றி முழு தகவல்கள்!!

Date:

ரயில் விபத்துகளைத் தடுக்கவும், பிரயாணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் ஸ்மார்ட் டிரெயின் என்னும் திட்டத்தினை இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரயில்களில் கறுப்புப் பெட்டி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய கண்காணிப்பு கேமரா, சென்சார்கள் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இதேபோல் 100 ரயில்களைத் தயாரிக்க இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

 smart train in india
Credit: India.com

முதல் கறுப்புப் பெட்டி ரயில்

இந்திய ரயில்வே வரலாற்றில் இப்போதுதான் முதல்முறை கறுப்புப் பெட்டி ரயில்களில் பொருத்தப்பட இருக்கிறது. கறுப்புப் பெட்டியானது ரயிலின் ஒவ்வொரு பெட்டிகளுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் பயணிகளுக்கான அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும். ஆபத்துக்காலத்தில் இந்த வசதி பேருதவி புரியும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இணையத்தில் இணையும் ரயில்

ரயில் பெட்டிகளில் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட இருக்கின்றன. ரயில் பயணிக்கும் பாதை, ரயிலின் நிறுத்தங்கள், காலநிலை போன்றவைகளை பயணிகள் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். ரயில் பாதைகளை ஆய்வு செய்யவும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து GPS மூலமாக ரயிலானது கண்காணிக்கப்படும். தகவல் பரிமாற்றமும் இதன்மூலமே நடைபெறுகிறது. PICCU (The Passenger Information And Coach Computing Unit) என்னும் வசதி மூலம் ரயிலில் உள்ள பயணிகளைப் பற்றிய தகவல்களை கண்காணிப்பு அறையில் உள்ள அதிகாரிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

 smart train in india
Credit: India.com

கண்காணிப்புக் கேமராக்கள்

ஒரு பெட்டிக்கு 6 வீதம் ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொறருத்தப்பட இருப்பதாக ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. பயணிகளை இதன்மூலம் நேரடியாகக் கண்காணிக்கலாம். இதனால் பெண்கள் பாதுகாப்பு, திருட்டு, சுகாதாரம் ஆகியவற்றிற்கான தீர்வுகளை அடைய முடியும்.

ஆபத்துக் காலத்தில் இயங்கும் Talk – Back வசதியின் மூலம் பயணிகள் தங்களது சந்தேகங்களை கணினிக் கட்டுப்பாட்டுக் கருவியிடம் கேள்வியெழுப்பலாம். அதற்குரிய பதில்களை கருவி அளிக்கும். இதுமட்டுமல்லாமல் WiFi வசதி பயணிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரயிலில் தண்ணீர் இல்லாமல் போகும்போது குறுஞ்செய்தி மூலம்  மக்கள் அதனைத் தெரிவிக்கலாம். இதற்கான எண் ரயில் பெட்டிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். ரயிலின் அடுத்த நிறுத்தத்தின்போது தண்ணீர் நிரப்பப்படும்.

 smart train in india
Credit: Jansatta

சுய கட்டுப்பாடு

என்னதான் புதிய புதிய திட்டங்களை  அமல்படுத்தினாலும் பொதுமக்களாகிய நமக்கு அதைக்குறித்த விழிப்புணர்வு மற்றும் கடமையை அறிந்திருத்தல் அவசியம். தற்போதுள்ள ரயில்களில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது நமக்கே தெரியும். பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவர்களைத் தவறாமல் தண்டிக்க வேண்டும். பல்லாயிரம் கோடி செலவில் அரசால் கொண்டுவரப்படும் திட்டத்தைச் சரியாக பயன்படுத்துவதும் நமது கடமையே ஆகும்.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!