ஸ்டெர்லைட் ஆலையும், மக்கள் போராட்டத்தின் பின்னணியும்

Date:

கடந்த சில நாட்களாக இணையத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் என்று நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஸ்டெர்லைட் ஆலை என்பது என்ன, அதனால் யாருக்கு தான் நன்மை, பாதிக்கப்படுவோர் யார், தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தின் பின்னணி என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.

ஸ்டெர்லைட் தொடக்கம்

ஸ்டெர்லைட் ஆலை 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் மீளாவிட்டான் பகுதியில் தொடங்கப்பட்டது. ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது அந்த நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம் தாமிர உருக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.இது வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற லண்டனை தலைமையகமாகக் கொண்ட மிகப்பெரிய நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் 1994 இல் மஹாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட போது, இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை அறிந்த அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை அரசு ஏற்காததால் 200 கோடி செலவில் கட்டப்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை அப்பகுதி மக்களே அடித்து நொறுக்கினர்.

அதன் பின்பு தமிழகத்தை தேடி வந்த இந்த ஆலைக்கு, 1994-ல் அ.தி.மு.க வின் ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்பு அந்த ஆலை 1996 – முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

யாருக்கு நன்மை

அரசு அனுமதிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் வழக்கம் போல் மக்களுக்கு தான் நன்மை, வேலைவாய்ப்பு உருவாகும் என்று சொன்னாலும், தீமை போகபோகத்தான் தெரிகிறது. வளர்ச்சித் திட்டங்கள் என்றே கூறப்பட்டாலும் மக்களுடைய வளர்ச்சிக்கானதா என்றால் அது தான் இல்லை. பெரும் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கான திட்டம் தான் இது.

வேதாந்தா ரிசோர்ஸஸ் ஆஸ்திரேலியாவில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்களை வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து தூத்துக்குடிக்கு தாமிரம் கப்பல் மூலம் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவருவது மிக எளிது என நன்மை என்னவோ நிறுவனத்துக்குத்தான்.

தீமைகள் 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை காற்றில் கலப்பதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது.

  • காற்று மாசு:
    • ஆலையில் இருந்து நச்சுப்புகையான கந்தக-டை-ஆக்ஸைடு (Sulfur dioxideவெளிவருவதால் காற்று முற்றிலும் மாசுபட்டுள்ளது.
    • ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்வதற்கு 2 கிலோ கந்தக-டை-ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
  • கடல் உள்ளிட்ட நீர்நிலை மாசு:
    • ஆலையின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும், கடலிலும் கலப்பதால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது.
    • மேலும், ஆலைக்கு தேவையான நீர் தாமிரபரணியில் இருந்து எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
  • நிலம் மாசு:
    • கழிவுநீர் கலந்த நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதால் பயிர்கள் கருகிப்போகின்றன.
  • மீன் வளம்:
    • கடலில் கலக்க விடப்படும் கழிவு நீர், அருகே உள்ள கடல் வளங்களை கெடுக்கிறது. இதனால், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
  • மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
    • இவை அனைத்தும் மாசுபட்ட நிலையில், அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு ஏற்பட்ட நிலை மாறி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயும் வருகிறது.
    • இன்னும் மோசமான நிலை என்னவெனில், பிறக்கும் குழந்தைக்கும் புற்று நோய் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்றும் மலட்டுத்தன்மை, சிறுநீரகக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
போராட்டம்

இந்த ஆலையினால் ஏற்படப்போகும் பாதிப்புகளை உணர்ந்த மக்கள் அப்போதே சிறு சிறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  இந்நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு இப்போது பெரிய அளவில் போராட்டம் நடை பெற்று வருகிறது. தற்போது, ஆலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இதனால், விரிவாக்கத்தை நிறுத்துவதோடு, ஆலையையும் மூடக்கோரி மக்கள் மிகத்தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 2018 முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், இளைஞர்களும், வயதானோரும் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மட்டுமல்லாது வெளியூர்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மட்டும் சுமார் 50,000 மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டுகொள்ளாத அரசு

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் பெரிய அளவில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் மூடக்கோரி  நடக்கும் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இரண்டு மாதங்களாக நடக்கும் போராட்டத்தை ஒரு அரசியல் தலைவரும் கண்டுகொள்ளாத நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்ததும், இன்று ராமதாஸ் மற்றும் ஸ்டாலின் வரை எதிர்க்கின்றனர்.

  • நடிகர் கமல்ஹாசன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
  • பாமக நிறுவனர் ராமதாஸ் கந்தக டை ஆக்ஸைடு கலப்பதால் புற்றுநோயை பரப்பும் என்றும் ஆலையை விரிவுபடுத்த அனுமதிப்பது அப்பகுதியில் வாழும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்வதற்கு சமமான செயலாகும் என்றும் கூறியுள்ளார்.
  • தி.மு.க வின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும், போராடும் மக்களுக்கு திமுக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
போராட்டக் களத்தில் கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தித்தாள்களும், செய்தி தொலைக்காட்சிகளும் ஸ்டெர்லைட் போராட்டத்தை பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி மக்கள் செய்தித்தாள்களை வாங்குவதில்லை என்று சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது.

சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் இவ்வாலையை மூடக்கோரி நடக்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்திற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!