இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி! Forbes வெளியிட்ட முழு பட்டியல்!!

Date:

பிரபல இதழான ஃபோர்ப்ஸ் (Forbes India) இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை (Richest Indian 2020) வெளியிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் பாதிப்பு போன்றவை நம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்த நிலையில் கொரோனாவின் பரவலால் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியும் கணிசமான சரிவுகளைச் சந்தித்தது. இந்த வருடம், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது, கூடவே இந்தியாவின் பொருளாதாரமும்.

இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 வது ஆண்டாக பணக்கார இந்தியராக முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவை கடுமையாக தாக்கிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு மத்தியில், ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்கார பட்டியலில் இடம்பிடித்த நாட்டின் 100 பணக்காரர்களில் பெரும்பாலோனோர் லாபமே கண்டனர். அவர்களின் கூட்டு நிகர மதிப்பு “14% உயர்ந்து 517.5 பில்லியன் டாலராக” உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி தொடர்ச்சியாக 13 வது ஆண்டாக பணக்கார இந்தியராக இருந்து வருகிறார். அவரது நிகர மதிப்பில் 37.3 பில்லியன் டாலர் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் புதிதாக நுழைந்தவர் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India(SII)) தலைவரான சைரஸ் பூனவல்லா (Cyrus Poonawalla). இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் ஆகும். அவர் 6 வது இடத்தில் இருக்கிறார்.

Rich Indian

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல்

1. முகேஷ் அம்பானி (Mukesh Ambani – 88.7 பில்லியன் டாலர்)

2. கவுதம் அதானி (Gautam Adani – 25.2 பில்லியன் டாலர்)

3. சிவ் நாடார் (Shiv Nadar – 20.4 பில்லியன் டாலர்)

4. ராதாகிஷன் தமானி (Radhakishan Damani – 15.4 பில்லியன் டாலர்)

5. இந்துஜா சகோதரர்கள் (Hinduja brothers – 12.8 பில்லியன் டாலர்)

6. சைரஸ் பூனவல்லா (Cyrus Poonawalla – 11.5 பில்லியன் டாலர்)

7. பல்லோன்ஜி மிஸ்திரி (Pallonji Mistry – 11.4 பில்லியன் டாலர்)

8. உதய் கோடக் (Uday Kotak – 11.3 பில்லியன்)

9. கோத்ரேஜ் குடும்பம் (Godrej Family – 11 பில்லியன் டாலர்)

10. லட்சுமி மிட்டல் (Lakshmi Mittal – 10.3 பில்லியன் டாலர்)

Forbes India வெளியிட்ட 100 Top 100 பணக்கார இந்தியர்கள் பட்டியலை காண இங்கே செல்லுங்கள்.

Forbes India Rich List 2020

Also Read: விரைவில் பணக்காரராக நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!