இந்தியாவில் வீட்டு சாதனப் பொருட்களின் விலை ஏறுகிறது – காரணம் என்ன ?

Date:

டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற வீட்டு சாதனப் பொருட்கள் அனைத்தும் விலையேற்றத்தை சந்திக்க இருப்பதாக இந்திய வீட்டுவசதி சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவில் பயணிப்பதாலும், பெட்ரோல் விலை அதிகரிப்பாலும் இம்முடிவை எடுத்திருப்பதாக CEAMA (Consumer Electronics and Appliances Manufacturers Association) தெரிவித்துள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ளனர்.

home appliance
Credit: Point Design Inc

எவ்வளவு விலை ஏறுகிறது ?

இந்திய சந்தையைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சாதனங்களின் விற்பனை குறைந்திருக்கிறது. தயாரிப்புச் செலவினங்களை ஈடுசெய்யும் அளவிற்குக் கூட விற்பனை இல்லாததன் காரணமாக 5% – 7% விலையினை ஏற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாக பானாசோனிக் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

10% சதவிகிதம் இருந்த சுங்க வரி 20% என அறிவிக்கப்பட்டது இறக்குமதியைக் கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது.

இறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் பணப்பரிமாற்றம் டாலரில் தான் நடக்கிறது. இந்தியாவின் பண மதிப்பு சரிவடைவதால் டாலரில் பணம் செலுத்துவதற்காகத் தயாரிப்பு  நிறுவனங்களால் அதிக பணம் இறக்குமதிக்காகச் செலவளிக்கப்படுகிறது. மேலும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையும் இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

புது சட்டமும் தலைவலியும் .

எலக்ட்ரானிக் மற்றும் வீட்டுசாதன உபயோகப் பொருட்களுக்கான சுங்கவரியை  இந்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்துவதாக அறிவித்தது. 10% சதவிகிதம் இருந்த சுங்க வரி 20% என அறிவிக்கப்பட்டது இறக்குமதியைக் கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது. இந்த விலையேற்றம் முதற்கட்டமாக 3% – 5% வரை விலையேற்றம் இருக்கும் எனவும் அதன்பின்னர் படிப்படியாக 7 சதவிகிதம் வரை விலையை அதிகரிக்கச் செய்ய இருப்பதாகவும் CEAMA அறிவித்திருக்கிறது.

Fridge, T.V, Washing Machine
Credit: Azn Addict

இந்தியாவில் பண்டிகைக்காலம் என்றாலே பெரும்பான்மையான மக்கள் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகிய பொருட்களை வாங்க படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குத் தகுந்தாற்போல் வீட்டு சாதனப் பொருட்கள் விற்பனையாளர்களும் அதிரடி விலைக்குறைப்பை அறிவிப்பார்கள். இந்த ஆண்டும் இதற்காக காத்திருக்கும் மக்களின் ஆசையை கேள்விக்குறியாக்கி உள்ளது இந்தப் புதிய அறிவிப்பு.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!