கடன் கொடுக்கும் கூகுள் – இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்!!

0
130

பிரபல இணைய நிறுவனமான கூகுள் (Google) தங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பல மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளில் லோன் வாங்குவதற்கு உதவி புரியும் புதிய செயலியை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது கூகுள்.

GOOGLE PAY
Credit: CNN

கூகுள் டெஸ் (Google Tez)

சென்ற ஆண்டு செப்டம்பரில் பணப் பரிமாற்றத்திற்காக கூகுள் நிறுவனத்தால் Tez செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கணிசமான வரவேற்பைப் பெற்றது இந்தச் செயலி. ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின் போதும் பரிசுத் தொகைகளை வேறு வழங்கியது கூகுள். இந்தியர்களைக் கவர இதைச் செய்தாலே போதுமல்லவா ? அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குள்ளாகவே  22 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தது Tez. தற்போது இந்தச் செயலியை கூகுள் பே(Google Pay) என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் நான்கு வங்கிகளுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது அந்நிறுவனம்

கடன் சேவையில் !!

கூகுள் நிறுவனம் வங்கிகளின் மூலமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்துக் கொண்டே தங்களது கூகுள் பே செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் நான்கு வங்கிகளுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது அந்நிறுவனம். வங்கிகளின் மூலமாக கடனுக்கு விண்ணப்பித்திருந்த நபர்கள் இந்த செயலியை தங்களது அலைபேசியில் தரவிறக்கம் செய்து இருக்க வேண்டும். கடனளிப்பதற்கான வழிமுறைகள் முடிந்த பின்னர் பணம் இந்தச் செயலியின் மூலமாக வாடிக்கையாளரை வந்தடையும்.

அறிந்து தெளிக !!
இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மூத்த அதிகாரி சீசர் சென்குப்தா (Caesar Sengupta) கூறுகையில் ,”இந்தப் புதிய செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது கடன் தொகையினை எளிமையாக அதே நேரத்தில் விரைவாகவும் பெற முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.

மின்னணுப் பண பரிமாற்றத்திற்கெனப் பல செயலிகள் இருக்கின்றன. இந்தியா போன்ற அதிகளவு பணம் புரளும் வர்த்தக நாடுகளில் இத்தகைய சேவைகளின் தேவையைப் புரிந்தே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் பணப் பரிமாற்றத்திற்கு மின்னணு முறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை – நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று..!!

கூகுளின் புதிய சேவை – நவேலிகா..!!

அறிந்து தெளிக !!
  • கடந்த மார்ச் மாதம் மட்டும் இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் மூலம் புழங்கிய தொகை 149.59 ட்ரில்லியன் ரூபாய் !!
  • 1 ட்ரில்லியன் = 100000 கோடி!!
google Tez
Credit: Indian Express

வாரன் பஃபட் (Warren Buffett) ன்  Berkshire Hathaway நிறுவனம் இந்தியாவில் பணப் பரிமாற்றத்  துறை நிறுவனமான Paytm ல் 360 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இத்துறையின் மேல் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டிவருகின்றன. பாதுகாப்பு, கால விரயமின்மை போன்ற காரணங்களால் இத்துறைகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிறது என ஆர்.பி.ஐ (RBI) தெரிவித்துள்ளது. கூகுளின் இப்புதிய சேவையும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.