தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுனராக ஓர் அரிய வாய்ப்பு!!

0
73
railway_
Credit: India Today

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தென்னக ரயில்வேயில் ஆக்ட் தொழில் பழகுனர்களுக்கான (Act Apprentices) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதமாதம் உதவித்தொகையுடன் (Stipend) தொழில்நுட்ப பணிமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்ள சிறந்த வாய்ப்பினை தெற்கு ரயில்வே வழங்குகிறது. இதுகுறித்து சென்னை தொழிற்கூட ஊழியர்த்துறை அலுவலகத்தில் இருந்து தரப்பட்டிருக்கும் தகவலின் படி ஆர்வமுள்ளோர் மற்றும் தகுதியுடையோர் www.rrcmass.in என்ற இணையதளத்திற்குள் சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Southern-Railway-Recruitment-1
Credit: Job Returns

காலிப்பணியிடங்கள்

  1. பெரம்பூர் பணிமனையில் கேரேஜ் ஒர்க்ஸ் – ல் உள்ள காலியிடங்கள் 924.
  2. பொன்மலையில் (திருச்சி) அமைந்திருக்கும் சென்ட்ரல் ஒர்க் ஷாப் – ல் காலியாக உள்ள இடங்கள் 797
  3. போத்தனூரில் இருக்கும் சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடத்தில் காலியாக உள்ள இடங்கள் 2652.

இப்படி மொத்தம் 4373 பணியிடங்களுக்கு தொழில் பழகுனர்களை நியமிக்க இருக்கிறது தென்னக ரயில்வே.

என்ன தகுதிகள்? (Qualifications)

  • விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது ஐ.டி.ஐ (Matriculation/ ITI) படித்திருக்க வேண்டும்.
  • 15 – 24 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ யில் எடுத்த மதிப்பெண்களின் மூலமாகவே தொழில்பழகுனர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
southern rayilway job
Credit: Tech Scribes

விண்ணப்பிப்பது எப்படி?

www.rrcmass.in என்னும் இணையதளத்தின் சர்வரில் விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். செயலாக்கக் கட்டணமாக ரூபாய் 100 வசூலிக்கப்படும் (SC/ST/PWD மற்றும் மகளிர் நீங்கலாக). இந்த வாய்ப்பு வரும் 13-01-2019 அன்று 17 மணி வரை முடிவடையும். தகுதியும் ஆர்வமும் உள்ளோர் இன்றே பதிவு செய்திடுக.