புழக்கத்திற்கு வருகிறது மஞ்சள் நிற 20 ரூபாய் நோட்டு

0
73
RBI
Credit: Jagran

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்த போது வெளிநாட்டில் இருந்து கருப்புப்பணம் கோடிகோடியாக இந்தியா வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது என்னவோ கலர் கலராய் ரூபாய் நோட்டுக்கள் தான். ரோஸ், பச்சை, ஆரஞ்ச் என குழந்தைகளுக்கு கிளுகிளுப்பு கொடுக்க விற்கப்படும் விளையாடுப்பணம் மாதிரி. இதில் மைக்ரோ சிப், சாட்டிலைட் டிடெக்சன் என புரளிப்புயல் மானாவாரியாக கிளம்பி மக்களை தலைசுற்ற வைத்தது.

20-rs-note
Credit: Nakkheeran

2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் வெளியிட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ரோஸ் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டும், பச்சை நிறத்தில் 500  ரூபாய் நோட்டும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.  சமீபத்தில் ஊதா நிறத்தில் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. இதனோடு புதிய 10 நோட்டும் வெளிவந்தது.

தற்போது வெளிவந்திருக்கும் இந்தப்புதிய 20 ரூபாய் நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த வெளிர் பச்சை நிறத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

RBI
Credit: Jagran

இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்தப்புதிய நோட்டில் மைக்ரோ சிப் ஏதும் இருக்கிறதா? என்பது பற்றிய தகவல்கள் இல்லை.