தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கணிசமான வளர்ச்சி விகிதத்தினைக் கொண்டிருக்கும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் பலவற்றை சமகாலத்தில் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் சில திட்டங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளால் இவ்விரு நாடுகளின் வளர்ச்சி அவ்வப்போது பாதிக்கப்படும். தற்போது கடந்த காலாண்டில் இந்தியா கடுமையான பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் சரிவிற்கான காரணங்களாக அவர்கள் பட்டியலிடும் விஷயங்கள் உண்மையில் அதிர்ச்சியையே நமக்கு அளிக்கின்றன.

அதிகரிக்கும் நஷ்டங்கள்
செப்டம்பர் மாதத்தினோடு முடிந்த காலாண்டில் GDP எனப்படும் வளர்ச்சி விகிதம் 7.1 % ஆக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.2 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகம் வாய்ந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரச் சரிவு உலகம் முழுவதும் இருக்கும் வல்லுனர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்தியாவின் உற்பத்தித்துறை மற்றும் வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த காலாண்டு வரை GDP யானது 7% இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 130 கோடி மக்கள் வசிக்கும் இதியாவில் 40 சதவிகித மக்களின் வேலைவாய்ப்பு மின்னணு வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வர்த்தகத்தை நேரிடியாகப் பாதிக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையும் இந்த சரிவிற்கு முக்கியக்காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் முதல் குறைந்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் பாதிப்பு குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆன்லைன் வர்த்தகம்
சுமார் 130 கோடி மக்கள் வசிக்கும் இதியாவில் 40 சதவிகித மக்களின் வேலைவாய்ப்பு மின்னணு வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அகன்ற பிரம்மாண்டமான சந்தை உலக நாடுகளின் பெரு வர்த்தக நிறுவனங்களை இங்கே கால்பதிக்க வைத்திருக்கிறது. இதனால் சிறு மற்றும் குறு வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தினைத் தொலைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
35 % வரை விலை குறைந்துள்ள கச்சாப் பொருட்களின் விலையாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக சரிவிலிருந்து ஐந்து சதவிகிதம் வரை மீண்டுள்ளதும் நம்பிக்கையான எதிர்காலத்தை இந்தியாவிற்கு வழங்கும் என நம்பலாம். மேலும் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலும் பொருளாதரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் உலகம் முழுவதும் உள்ள பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளனர்.