பி.எப் கணக்குகளை இணைத்து வரி சேமிப்பது எப்படி?

Date:

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம் பிஎப் கணக்கு வைத்துள்ள மாத சம்பளதாரர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள், பிஎப் பணத்தை இடையில் எடுக்கும் முன்பு அது உங்கள் வருமான வரியை அதிகரிக்குமா என்றும் சரிபார்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் 5 வருடங்கள் வரை தொடர்ந்து பணி செய்த பிறகு பிஎப் பணத்தை இடையில் எடுக்கும் போது அந்த பணத்திற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

ஒருவேலை 5 வருடம் வரை ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் முன்பு, பிஎப் கணக்கில் உள்ள பணத்தை இடையில் எடுத்து பயன்படுத்தினால், பிஎப் கணக்கு மூலம் கிடைத்த வட்டி வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். அதேநேரம் உடல் நலக்குறைவு, வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டது அல்லது நிறுவனத்தில் ஏற்பட்ட அசாதாரமான சூழல் போன்ற காரணங்களுக்கு பிஎப் பணத்தை இடையில் எடுத்தால் வரி விலக்கு உண்டு.

சிலர் 5 வருடத்திற்குள் பல்வேறு முறை நிறுவனம் மாறி வேலைக்கு சென்று இருந்தால், யுஏஎண் ஒன்றாக இருக்கும். ஆனால் பிஎப் கணக்கு வெவ்வேறாக இருக்கும். இது போன்ற சூழலில் முந்தைய நிறுவனத்தின் பிஎப் கணக்கையும், பிஎப் கணக்கையும் இணைத்தால் தான் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றியுள்ளதாக கருதப்படும்.

எனவே பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய பிஎப் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பிஎப் கணக்கை ஆன்லைனில் டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

1) https://unifiedportal-mem.epfindia.gov.in/ என்ற இணைப்பிற்கு சென்று, யுஏஎண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

PF name update 1 1

2) பிஎப் கணக்கில் உள்நுழைந்த பிறகு, ‘Online services’ என்ற மெனுவிற்கு சென்று One Member – One EPF Account என்பதை கிளிக் செய்க.

PF 1 1

3) தனிநபர் விவரங்கள் மற்றும் நடப்பு வேலைக்கான பிஎப் கணக்கை சரிபார்க்கவும்.

4) அடுத்து முந்தைய நிறுவனத்தின் யுஏஎண் அல்லது பிஎப் கணக்கு விவரங்களை அளித்து ‘Get details’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

PF 2 1

5) முந்தைய நிறுவன ஊழியர் அல்லது நடப்பு நிறுவன ஊழியர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) பின்னர் ‘Get OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் யுஏஎண் கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்குக் கடவுச்சொல் அனுப்பப்படும். ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.

பிஎப் கணக்கை இணைப்பதற்கான கோரிக்கைக்கு நிறுவனம் ஒப்புதல் வழங்கிய பிறகு, முந்தைய நிறுவனத்தின் பிஎப் கணக்கிலிருந்த பணம் தற்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கப்படும். இதற்கு 30 நாட்கள் வரை காலம் எடுத்துக்கொள்ளப்படும். இணைத்த பிறகு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மொபைல் எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.

ஒருவேலை இடையில் என்ன நிலை என்று செக் செய்ய வேண்டும் என்றால், ‘Online services’ என்ற மெனுவிற்கு சென்று ’Claim Status’ என்பதை செக் செய்வதன் மூலம், உங்கள் பிஎப் கணக்கு இணைப்புக் கோரிக்கையின் நிலையை எளிதாக கண்டறிய முடியும்.

PF 3 1

இதுபோல ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் போது, பிஎப் கணக்கை இணைத்த பிறகு, பிஎப் பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை வைத்தால் தான் அதிக தொகையை இடையில் எடுக்க முடியும்.

This post was originally published in seithichurul.com and first appeared as ‘பிஎப் கணக்குகளை இணைத்து வரி சேமிப்பது எப்படி?

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!