Home அரசியல் & சமூகம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை - நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று..!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை – நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று..!!

நவம்பர் 8, 2016. இந்திய மக்களால் மறக்க முடியாத நாள். அன்று தான் நம் பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். திடீரென்று அன்று நள்ளிரவு முதல் புழக்கத்திலிருந்த 500 ருபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கும் எனவும், அதற்கு மாற்றாக புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார். இதைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அனைத்தும் அனைவரும் அறிந்ததே.

கருப்புப் பணத்தை ஒழிப்பது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக் காரணமாக முன் வைக்கப்பட்ட போதிலும், இது பிரதமர் மோடி அவர்களின் கேஷ்லெஸ் இந்தியா (Cashless India) எனும் கனவினை நோக்கிய ஒரு முக்கியப் படியாக அப்போது பொருளாதார நிபுணர்களால் விமர்சிக்கப் பட்டது.

இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால், பிரதமர் மோடி நினைத்தது ஒன்றாக இருக்க, தற்போது  நடந்திருப்பது வேறு ஒன்றாக இருக்கிறது.

Credit : Quartz

2018-ஆம் நிதி ஆண்டில், தேசிய வருவாயில் 2.8% அளவினை இந்திய மக்கள் கையிருப்பாக வீட்டில் வைத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் குடிமக்கள் கையிருப்பு வீதம் தொடாத உயரம் இது. அதே போல், வங்கி சேமிப்புகள் மற்றும் பிற முதலீடுகள் வீதம் கடும் சரிவைச் சந்தித்து 2.9% ஆக இருப்பதாக, மத்திய ரிசர்வ் வங்கி (Reserve bank of India) ஆகஸ்ட் 29-ல் வெளியிட்ட ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

வங்கிகளில் பணம் எடுத்தலில் இருக்கும் கட்டுப்பாடுகள், பணத்திற்கான தேவை ஆகியவற்றின் காரணமாகத் தான் முதலீடுகள் இந்த அளவிற்குக் குறைந்திருக்கின்றன. இந்த வீதம் டிசம்பர் 08. 2017-ல் 2.6% ஆக இருந்தது. ஆண்டு முழுவதும் சீராகச் சென்ற இந்த வளர்ச்சி வீதம், மார்ச் 31, 2018-ல் 5.8% ஆக வீழ்ச்சி அடைந்தது.

இந்திய மொத்த நிகர லாபத்தில் இதன் பங்கு 10.9% ஆகும். எப்படிப் பார்த்தாலும் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழல் கொண்ட நாட்டிற்கு இது அதிகமான ஒன்று. சென்ற நிதி ஆண்டில் இந்த விகிதம் 8.8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Credit : Scoopwhoop

வங்கியில் புழங்கும் ரூபாய்களின் வீதம் 37.7% உயர்ந்து இந்த நிதியாண்டில் 18.03 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், ரூ .2,000 மற்றும் ரூ 200 போன்ற உயர் மதிப்பு நோட்டுகள் மாற்றப்பட்டதிலிருந்து இந்த அளவு 2.1% மட்டுமே அதிகரித்துள்ளது.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த போது, அவற்றின் மதிப்பு நாட்டின் மொத்த பண மதிப்பில் 86% ஆக இருந்தது. மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வங்கி வைப்புத்தொகை அதிகரித்தாலும், மின்னணுப் பரிவர்த்தனைகள் மூலம் அப்போதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

Credit : Scoopwhoop

இருப்பினும், இயல்புநிலை திரும்பிய பின்னரும், பணம் மீண்டும் நிலையைப் பழைய பொருளாதாரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

” மின்னணுப் பரிவர்த்தனைகள் மூலம் கையிருப்புப் பணத்திற்கான தேவை குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. மின்னணுப் பரிவர்த்தனைகள் தற்போது அதிகம் நடைபெறுகின்றன. ஆனால், பொருளாதாரச் சூழல் விரிவடைகையில் பணம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும்.”

இது ATM இயந்திரங்களை நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரி பண மதிப்பிழப்பு சமயத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தது.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -