இந்தியாவின் 5 விமான நிலையங்களைக் கைப்பற்றும் அதானி நிறுவனம்

0
38
gautam-adani_

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது. முதற்கட்டமாக திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனமான அதானி குழுமம் மொத்தமுள்ள ஆறு விமான நிலையங்களில் 5 ஐ நிர்வகிக்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

airplane-bird-loomimg-eyes
Credit: CNN

ஐந்து விமான நிலையங்கள்

கவுகாத்தி நீங்கலாக மீதமுள்ள திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்புப் பணியினை அதானி குழுமம் செய்ய இருக்கிறது. இதுகுறித்து அதானி நிறுவனம் தெரிவித்திருந்த தொகை அரசுக்கு சாதகமாக இருந்ததால் அந்நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கான முதலீடு அனைத்தும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில் கிடைக்கக்கூடிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்ததந்த விமான நிலையத்துக்கு வழங்கிட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கவுகாத்தி விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்துறையை எடுத்து நடத்த இருக்கும் நிறுவனம் எது? என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

gautam-adani_அதானி குழுமம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தலைமையிடத்தைக் கொண்டிருக்கும் அதானி நிறுவனம் உலகமெங்கிலும் 50 நாடுகளில் சுமார் 70 இடங்களில் இயங்கிவருகிறது. பாதுகாப்பு, கட்டுமானத்துறை, வேளாண்மை எனப்பல்வேறு துறைகளில் கால்பதித்திருக்கிறது அதானி குழுமம். ஏற்கெனவே இந்தியாவின் தனியார் துறைமுகங்களில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்துறையை மேற்கொண்டுவரும் இந்நிறுவனம் தற்போது விமானநிலையங்களையும் கைப்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.