எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்

Date:

தமிழகத்தின் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், தெறிக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர் திரு.சுஜாதா. ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், இவரது காலத்தில் மற்றொரு ரங்கராஜன் இருந்ததால் குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க தனது பெயரை சுஜாதா என மாற்றிக்கொண்டார். சுஜாதா என்பது அவருடைய மனைவியின் பெயராகும். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், திரைப்படத்துறையில் கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தனி முத்திரையினைப் பதித்தவர். அவருடைய படைப்புகளில் சிறந்த 10 புத்தகங்களை இங்கே தொகுத்துள்ளோம். சிறந்ததாக நீங்கள் என்னும் படைப்புகளை கமென்ட் செய்யுங்கள்.

கரையெல்லாம் செண்பகப்பூ

முழுக்க முழுக்க கிராமத்தில் தான் நடக்கின்றது. நாட்டுப்பாடல்களைத் தேடி வரும் கல்யாணராமன், வெள்ளி மீதான அவனது காதல், மருதமுத்துவை விழுந்து விழுந்து காதலிக்கும் வெள்ளி, சிறுபிள்ளைத்தனம், சிருங்காரம், சில்மிஷம் கூடவே கொஞ்சம் விஷமம் என புரியாத புதிராக சினேகலதா, வெள்ளியை மறந்து விட்டு சினேகலதாவே தஞ்சம் என்று கிடக்கும் மருதமுத்து என முதற்பகுதி சமூகநாவல் போல நகர்ந்தாலும் இருளில் மறைந்து திரியும் உருவம் “இல்லை இல்லை இது ஒரு க்ரைம் த்ரில்லர்”

கரையெல்லாம் செண்பகப்பூ / Karaiyellam Senbagappoo (Tamil Edition)
103 Reviews
கரையெல்லாம் செண்பகப்பூ / Karaiyellam Senbagappoo (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • சுஜாதா / Sujatha (Author)
  • Tamil (Publication Language)
  • 253 Pages - 12/01/2010 (Publication Date) - Kizhakku Pathippagam (Publisher)

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் நாவல். மனதை அதிர வைக்கும் சில சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த புத்தகம் கொலையுதிர் காலம்.

Sale
Kolaiyuthir Kaalam / கொலையுதிர் காலம்
  • Language Published: Tamil
  • Binding: Paper Back
  • Sujatha / சுஜாதா (Author)
  • Tamil (Publication Language)
  • 360 Pages - 05/29/2023 (Publication Date) - Thirumgal Nilayam (Publisher)

சுஜாதாவின் சிறுகதைகள்

சுஜாதாவின் சிறுகதைகள் – கதைகளின் தொகுப்பு.

சுஜாதாவின் சிறுகதைகள் (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • சுஜாதா (Author)
  • Tamil (Publication Language)
  • 489 Pages - 10/02/2018 (Publication Date)

மேலும் ஒரு குற்றம்

மேலும் ஒரு குற்றம் மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது – ‘சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!’ கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புரியாத புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான் கணேஷ். முதலாளி ஒரு மறைமுகமாக மற்றொரு சவாலையும் எதிர்கொள்கிறான்.

மேலும் ஒரு குற்றம் / Maelum Oru Kuttram (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • சுஜாதா / Sujatha (Author)
  • Tamil (Publication Language)
  • 129 Pages - 12/01/2010 (Publication Date) - Kizhakku Pathippagam (Publisher)

கற்பனைக்கும் அப்பால் 

கற்பனைக்கும் அப்பால் 25 அற்புதமான அறிவியல் கட்டுரைகளை கொண்டது. உலகம் எப்பிடி தோன்றியது முதல் மனிதன் தொட்டு அடுத்த 50 ஆண்டுகள் அறிவியல் உலகம் எப்படி உருமாறி இருக்கும் என ஆழமான அறிவை வழங்கியிருக்கிறது புத்தகம். 

கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • சுஜாதா / Sujatha (Author)
  • Tamil (Publication Language)
  • 112 Pages - 04/01/2017 (Publication Date) - Kizhakku Pathippagam (Publisher)

பிரிவோம் சந்திப்போம்

‘பிரிவோம்… சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதையும் எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத பெண் மதுமிதா, தீர்க்கமான மற்றும் தெளிவான அமெரிக்க தமிழ்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. ‘ஆனந்த தாண்டவம்’ என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது. 

Sale
Pirivom Sandhippom
  • No. Of Pages:464
  • Binding type : Paperback
  • Language: Tamil
  • Published By : Kizhaku Pathipagam
  • Sujatha (Author)

கனவு தொழிற்சாலை

எத்தொழிற்சாலையிலும் இவ்வளவு கனவுகள் நிறைவேறவும், நிராகரிக்கவும் முடியாது. அவ்வாறு நடப்பதால் என்னவோ இது கனவுத் தொழிற்சாலையாக இருக்கிறது. என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். (ஏ)மாற்றமும் ஏக்கமும் நிறைந்ததுதானே சினிமா வாழ்க்கை.

Sale
Kanavu Thozhirsalai
8 Reviews
Kanavu Thozhirsalai
  • No. Of Pages:344
  • Binding type : Paperback
  • Language: Tamil
  • Published By : Kizhaku Pathipagam
  • Sujatha (Author)

கற்றதும் பெற்றதும்

அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியது. மேலும், சென்னை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? கருத்து சுதந்திரம் என்பது என்ன? பொது வாழ்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? வன்முறையையும் லஞ்சத்தையும் வெல்லக்கூடிய சக்தி எது? போன்றவை பற்றியும் அலசும் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளன.

Katradhum Petradhum (Part -1) (Tamil Edition)
105 Reviews
Katradhum Petradhum (Part -1) (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • Sujatha (Author)
  • Tamil (Publication Language)
  • 773 Pages - Vikatan.com Private Limited (Publisher)

நைலான் கயிறு

சுஜாதா அவர்களின் முதல் நாவல். அடுக்குமாடிக் கட்டிடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது. ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி இந்தக் கொலை வழக்கை விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். வித்தியாசமான நடையில் எழுதப்பட்டு இருக்கும் ஓர் நாவல்.

நைலான் கயிறு - Nylon Kayiru
258 Reviews
நைலான் கயிறு - Nylon Kayiru
  • Amazon Kindle Edition
  • Sujatha, சுஜாதா (Author)
  • English (Publication Language)
  • 130 Pages - 03/20/2019 (Publication Date)

ஏன்? எதற்கு? எப்படி?

‘ஏன்? எதற்கு? எப்படி?’ – முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது.

Enn? Etharku? Eppadi? (Part -1) (Tamil Edition)
  • Amazon Kindle Edition
  • Sujatha (Author)
  • Tamil (Publication Language)
  • 704 Pages - Vikatan.com Private Limited (Publisher)

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!