தமிழகத்தின் மிகப்பெரும் புத்தகக் கண்காட்சி என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சி தான். தமிழின் முக்கிய பதிப்பகங்கள் இங்கே கலந்துகொள்கின்றன. பொருளாதார ரீதியாகவும், பெரும்பான்மை மக்களைச் சென்றடையும் விதத்திலும் சென்னை புத்தகக் கண்காட்சி தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. பல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகள் இம்முறை விற்பனைக்கு களமிறங்கியிருக்கின்றன. எதை வாங்கவேண்டும் முன்கூட்டிய தீர்மானங்கள் இல்லையெனில் புத்தகக் கண்காட்சி நம்மைத் திணறடித்துவிடும். குறிப்பாக புதிய வாசகர்கள் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகங்களை கீழே காணலாம். (இவை தர மதிப்பீட்டின் படி வரிசைப்படுத்தப்படவில்லை)
- அசோகமித்ரனின் ஒற்றன் (காலச்சுவடு பதிப்பகம்)
- Amazon Kindle Edition
- Ashokamithran (Author)
- Tamil (Publication Language)
- 664 Pages - 01/01/2012 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
சுஜாதாவின் மீண்டும் ஜீனோ (கிழக்கு பதிப்பகம்)
ஜெயமோகனின் காடு (கிழக்கு பதிப்பகம்)
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
சரவண கார்த்திகேயனின் கன்னித்தீவு (உயிர்மை பதிப்பகம்)
எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் (தேசாந்திரி பதிப்பகம்)
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் (விகடன் பதிப்பகம்)
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் (விகடன் பதிப்பகம்)
பெருமாள் முருகனின் மாதொருபாகன் (காலச்சுவடு பதிப்பகம்)
சாரு நிவேதாவின் ஸீரோ டிகிரி (கிழக்கு பதிப்பகம்)
சிறுகதைகள்
போகன் சங்கரின் போக புத்தகம் (கிழக்கு பதிப்பகம்)
ஜெயமோகனின் அறம் (வம்சி புக்ஸ்)
எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் (மூன்று தொகுதிகள்) (உயிர்மை பதிப்பகம்)
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் (கிழக்கு பதிப்பகம்)
வண்ணதாசனின் ஒரு சிறு இசை (சந்தியா பதிப்பகம்)
சுபாவின் குற்றம் புரிந்தவர் (விகடன் பதிப்பகம்)
சரவண கார்த்திகேயனின் மியாவ் ( உயிர்மை பதிப்பகம்)
அனோஜ் பாலகிருஷ்ணனின் பச்சை நரம்பு (கிழக்கு பதிப்பகம்)
சுந்தர ராமசாமியின் பிரசாதம் (காலச்சுவடு பதிப்பகம்)
பவா செல்லத்துரையின் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை (வம்சி புக்ஸ்)
இவை தவிர்த்து நீங்கள் வாங்க/வாசிக்க விருப்பப்படும் புத்தகங்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.