Home கலை & பொழுதுபோக்கு இலக்கியம் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்!

நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்!

இந்த புத்தகங்களை படிக்க எடுத்தால், முழுவதும் படித்து முடிக்கும் வரை கீழே வைக்கமாட்டீர்கள்.

நம்மை நாமே தொலைத்து விடக்கூடிய இடமும், நம்மை நாமே புத்துருவாக்கிக் கொள்கிற இடமும், நமக்கே நம்மை உணர்த்தி, நம்மை மாற்றி விடக்கூடிய வல்லமையும் நிறைந்தவை புத்தகங்களே. மனிதனின் வாழ்க்கை பயணத்தில் வெற்றிக்கான பாதைகளாகவும், படிக்கட்டுகளாகவும் அமைவது புத்தகங்களே. எழுத்துக்கள் தான் பக்கமெல்லாம் நிறைந்திருந்தாலும், ஈர்ப்பு குறையாமல் நம்மை படிக்கத் தூண்டுவது சில புத்தகங்களே. அப்படிப்பட்ட 10 புத்தகங்களின் பட்டியல் இங்கே…

1. பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் – அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் பெற்ற மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும், தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது இப்புத்தகம். கி.பி. 1000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

சோழர்களின் ஆட்சியைப் பற்றி பல வரலாற்று நூல்களில் இருந்து தெரிந்து கொண்டிருந்தாலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் கற்றிருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை பலரும் மீண்டும் கூட வாசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் தளத்தில் இதன் 5 பாகங்களையும் வெறும் 450 ரூபாய்க்குள் வாங்க முடியும்.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

2. புயலிலே ஒரு தோணி

தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் தொட்டுள்ளது தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன. 

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

3.ஒரு புளியமரத்தின் கதை

சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. 1966 ல் முதல் பதிப்பு வெளிவந்தது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000 ஆம் ஆண்டில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. தற்போது ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

4. கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம் கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. கதை மாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்லக் கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது. கிராமிய மொழிநடையும இடையிடையே புரியாத கிராமியச சொறகளும பயனபடுததபபடடிருநதாலும கூட சரளமான மொழிநடை(Flow) மறறும கதைகளின சுவாரஸயம காரணமாக எநத இடத்திலும சலிப்புத் தட்டவிலலை.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

5. கடல் புறா

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும்.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

6. மோகமுள்

மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள புத்தகம் ‘மோகமுள்’ சங்கீத விஷயத்தின் மூலம் நாவலில் ஏற்படுகிற ஒரு ஆழம் உண்மையானதாக, உயர்வானதாக அமைந்துள்ளது.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்..

7. ஜே.ஜே சில குறிப்புகள்

ஜே ஜே சில குறிப்புகள் சுந்தர ராமசாமி அவர்களின் புதினம். மலையாளக் கலாச்சாரப் பின்னணியில் தமிழ்க் கலாச்சாரம் தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் நாவல்.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்

8. சிவகாமியின் சபதம்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம். காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. 

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்

9. அலை ஓசை

அலை ஓசை சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் போது, பொது மக்களின் மனநிலை குறித்து எழுதப்பட்ட நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்றது.


அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்

10.உடையார்

பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த விதத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது. உடையார் ஆறு பாகங்களைக் கொண்டது.

அமேசான் தளத்தில் வாங்க கிளிக் செய்யவும்

இதுவரை நீங்கள் வாசித்ததிலேயே உங்கள் வாழ்க்கையை பாதித்த சிறந்த புத்தகம் எது? எவ்வாறு? என்பதை கமெண்ட்களில் பதிவிடுங்கள். பிறருக்கு பயன்படலாம்🤝

- Advertisment -

Must Read

- Advertisment -