சிறந்த நிர்வாகத்திறமை என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் தொழில்முறை போட்டிகள் நிறைந்த உலகில் வர்த்தக உலகிற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக திகழ்வதற்கே நிர்வாகத்திறமை அவசியமாகிறது.
பில் கேட்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கி உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர்.
தொழில் முனைவோர் பெரும்பாலானோரின் ஆதர்ச நாயகனான பில் கேட்ஸுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அது, தீவிரமாக புத்தகம் படிப்பது தான். அதோடு மட்டுமல்லாது படித்ததில் மிகவும் பிடித்த புத்தகத்தைப் பற்றி அவரது வலைப்பக்கத்தில் எழுதுவதும் அவருக்கு இருக்கும் மற்றொரு பழக்கமாகும்.
அந்தவகையில் அவர் பல வகையான புத்தகங்களை பரிந்துரைத்து வருகிறார். நிர்வாக திறமையை மேம்படுத்த, தலைமைப்பண்பை வளர்த்தெடுக்க தொழில் முனைவோரை பில் கேட்ஸ் படிக்க கூறும் 10 மிகச் சிறந்த புத்தகங்களை தொகுப்பு இது. இவை அனைத்தும் ஆங்கில புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
புத்தகத்தின் தலைப்பிலேயே அமேசான் தளத்தில் வாங்கிக்கொள்ள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
1. Business Adventure By John Brooks
- Physical Condition: No Defects
- Brooks, John (Author)
- English (Publication Language)
- 11/12/2014 (Publication Date) - Hodder And Stoughton (Publisher)
நாம் நமது நிறுவனத்தை சிறப்பாக நடத்தி பெரிய வெற்றியைப் பெறுவதற்கு, பிற வணிகங்கள் எப்படி வெற்றிகரமாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதோடு , ஏன் அவை தோல்வியடைகின்றன என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் இந்த இரண்டு பக்கத்தையும் மிக ஆழமாக விவரித்து சொல்கிறது.
பில் கேட்ஸ் கூறுவது இதுதான்.
“வாரன் பஃப்பெட் என்னிடம் கொடுத்து இருபது வருடங்களுக்கு மேலாகவும், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக, நான் இதுவரை படித்த சிறந்த வணிக புத்தகமாக உள்ளது. ஜான் ப்ரூக்ஸ் இன்னும் எனக்கு பிடித்த வணிக எழுத்தாளர்!”
2. Mindset: The New Psychology of Success, by Carol Dweck
இந்த புத்தகம் நீங்கள் ‘சிறப்பானவராக’ பிறக்காத வரை வெற்றி பெற முடியாது என்ற நினைப்பை தகர்க்க உதவுகிறது. வெற்றி பெற நீங்கள் பெரிய மாயாஜால உள்ளார்ந்த திறன் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என்கிறது. இது பெரிய அளவில் உந்துசக்தியைத் தரும் புத்தகமாகும்.
3. Steve Jobs by Walter Isaacson
ஆப்பிள் நிறுவனரும், அந்நிறுவனத்தின் உலகப்புகழ் பெற்ற முன்னாள் செயல் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது.
நிஜத்தில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியாக பொருட்களை உருவாக்கி விற்ற நிறுவனங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்று வாரங்கள் கழித்து வெளிவந்த இப்புத்தகத்தை பில் கேட்ஸ் பரிந்துரைக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் பலருக்கும் ‘மாஸ்டர்’ ஆக இருக்கிறார் என்பதை உணர முடியும்.
4. Tap Dancing to Work: Warren Buffett on Practically Everything
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இந்த புத்தகம் அவரது நண்பரான கரோல் லூமிஸ் என்பவர் தொகுத்த பஃபெட் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
இதைப்பற்றி பில் கேட்ஸ் இவ்வாறு கூறுகிறார்.
“இதை வாசிக்கும் எவருமே இந்த இரண்டு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக, தனது வாழ்நாள் முழுவதும் தனது பார்வை மற்றும் முதலீட்டு கொள்கைகளைப் பயன்படுத்துவதில் நம்பமுடியாத விதத்தில் வாரன் இருந்தார்; இரண்டாவதாக, வணிக மற்றும் சந்தைகளின் பகுப்பாய்வு பற்றிய அவரது இணையற்ற புரிதல்.”
5. Awakening Joy: 10 Steps to Happiness

நாம் ஏன் வெற்றி பெற வேண்டும்? வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது ஒரு காரணம். நீங்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போது இந்த மகிழ்ச்சியை எப்படிப் பெறுவீர்கள் என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்பிக்கிறது.
6.Where Good Ideas Come From: The Natural History of Innovation
வெற்றிகரமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு புதுமை (Innovation) தேவை. புதுமைகளை படைப்பது பலருக்கும் எளிதாக கைவராத கலை. புதுமைகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி ஸ்டீவன் ஜான்சன் எழுதியது.
வணிக அல்லது கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு, இது மிகவும் பயனுள்ள புத்தகம் என்கிறார் கேட்ஸ்.
7. Moonwalking with Einstein: The Art and Science of Remembering Everything
உங்களுக்கு மறதி இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியாது. தெளிவற்ற உண்மைகள் மற்றும் பயனுள்ளவற்றை மனனம் செய்வது எப்படி என்று இந்த புத்தகம் உங்களுக்கு கற்றுத்தரும். இன்று காலையில் உங்களைச் சந்தித்தவரின் பெயரை மறப்பவரா நீங்கள்? கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.
8. Change by Design: How Design Thinking Transforms Organizations and Inspires Innovation, by Tim Brown
வடிவமைப்பு சிந்தனை என்பது சிக்கல் தீர்க்கும் ஒரு மாதிரி. அது உலக சுகாதார மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. வடிவமைப்பு சிந்தனை என்பது படைப்பு துறைகளில் அல்லது வடிவமைப்பு துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தாது. அது பல நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு முறை.
9. Life Is What You Make It: Find Your Own Path to Fulfillment
பலரும் நினைப்பதை போன்று பீட்டர் பஃப்பெட் தந்தையிடமிருந்து பெரும் செல்வத்தைபெற்று முன்னேறியவரில்லை. அதற்கு பதிலாக, அவர் சொந்த முயற்சியால் செல்வம் சேர்க்க, சொந்த பாதை உருவாக்க அவரது பெற்றோர்கள் தந்த ஊக்கத்தால் முன்னேறியவர். இப்புத்தகம் அந்த முன்னேற்ற வாழ்க்கைப் பயணத்தின் ஒரு காலப்பகுதியாகும் – மற்றும் வழியில் பெற்ற உருவாக்கிய ஞானம் மற்றும் உணர்வுகளின் தொகுப்பு. உத்வேகத்தை தரக்கூடிய படைப்பு.
10.The Myth of the Strong Leader: Political Leadership in the Modern Age
இந்த புத்தகம் பில் கேட்ஸ் அவர்களால் ‘Book of the Year 2016’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசியல் தலைவர்களுக்கான ஆளுமை தொடர்பான விவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் இப்புத்தகம் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அவர்களின் செயல்களையும் மையப்படுத்தி உள்ளது.
மைக்ரோசாப்ட் போன்று உங்களது தொழிலும் பெரும் வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்!