கொக்கு, நாரை ஒற்றைக் காலில் நிற்பது ஏன்? காரணம் தெரியுமா?

Date:

இயற்கை படைப்புகளில் மிகவும் அழகுடன், வித்தியாசமாக தோன்றமளிக்கும் நாரை என அழைக்கப்படும் ஃபிளமிங்கோ பறவைகள் பொதுவாக ஒற்றை காலில் நீண்ட நேரம் நின்று ஓய்வெடுக்கும் தன்மை கொண்டது. வெள்ளை நிறத்தில் பளிச்சென இருக்கும் கொக்குகளும் ஒற்றைக்காலில் நிற்பவை தான்…

பிரகாசமான இளஞ்சிவப்பு இறகுகளை கொண்ட நாரைகள் (Flamingos) மற்ற பறவைகளை ஒப்பிடும் போது இயற்கையாகவே தலைகீழாக சாப்பிடும். மேலும் தலையை தனது முதுகில் வைத்து தூங்கும் இயல்புடையவை.

நாரைகள் (ஃபிளமிங்கோக்கள்), கொக்குகள் எதனால் ஒற்றை காலில் நீண்ட நேரம் நின்று ஓய்வெடுக்கின்றன என்ற கேள்வி பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கொக்கு, நாரை ஒற்றை காலில் நிற்பது ஏன்?

நாரைகள், கொக்குகள் ஒற்றைக்காலில் நிற்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் காரணம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள் இவை தான்.

  1. ஒரு கோட்பாட்டில் நாரைகள் நீண்ட நேரம் ஒற்றை காலில் நிற்பது என்பது நாரைகளின் தசை சோர்வை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது மட்டுமின்றி, மற்ற பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாட வரும் போது, அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக நாரைகள் விரைவாக பறக்க ஒரு காலில் நிற்பது இலகுவாக அமைகிறது என்கின்றனர்.
  2. இருப்பினும் மற்றொரு கோட்பாடில், நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பது உடல் வெப்பநிலையை பராமரிப்பதை சமன் செய்வதாக நம்புகின்றனர். அதாவது, பொதுவாக நாரைகள் கால்கள் வழியாக அதிக வெப்பத்தை இழப்பதால், ஒரு காலை உடலுடன் நெருக்கமாக வைத்திருப்பது அவைகளின் உடலில் சூடான சமநிலையை உருவாக்கும் என்கின்றனர்.

நாரைகள் பற்றிய இரண்டு கோட்பாட்டின் உண்மைகள்!

Flamingo - நாரை
Credit: sporcle.com

நாரைகள் பற்றிய இந்த இரண்டு கோட்பாடு குறித்தும், பிலடெல்பியா மிருகக்காட்சியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், நாரைகள் ஒற்றை கால் அல்லது இரண்டு காலில் நிற்கும் நிலையில் இருந்து எவ்வளவு விரைவாக நகர முடிந்தது என்பதை அளவிடுவதன் மூலம் தசை சோர்வு சோதிக்கப்பட்டது.

மேற்கூறிய, இரண்டு கோட்பாடு சரியாக இருந்தால் நாரைகள் நீண்ட நேரம் ஒரு காலில் நிற்கும் போது விரைவாக பறக்க வேண்டும்.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின் படி நாரைகள் இரு கால்களில் நிற்கும் போது தான் உண்மையில் வேகமாக பறப்பதை கண்டறிந்தனர்.

பொதுவாக தட்ப வெப்ப நிலையில், வெப்பமான சூழ்நிலைகளில் நாரைகள் இரண்டு கால்களுடன் நிற்கின்றன. குளிர்ச்சியான சூழ்நிலைகளில், அவைகள் பொதுவாக ஒரு காலில் நிற்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் நாரைகள்.. எப்படி நிற்கின்றன?

நாரைகள் பொதுவாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்பமான வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகின்றன. எனவே, அவற்றின் உடல் வெப்பநிலையை சீராக்க வேண்டியதின் அவசியம் தேவையற்றது.

இருப்பினும், அவைகள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை தண்ணீரில் செலவிடுகின்றன. இது அவைகளின் உடல் வெப்பநிலையை மிக விரைவாகக் குறைக்கும். எனவே அவைகளுக்கு வெப்பம் தேவைப்படுகிறது.

இதனை தவிர்த்து மற்றொரு கோட்பாடு, திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் போன்று நாரைகள் தூங்கும்போது அவைகளின் மூளையில் பாதி பகுதி விழிப்புடன் இருக்கிறது என்றது. நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பது நாரைகளின் இயற்கையின் பிரதிபலிப்பாகும். இது அவைகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் அவை விழாமல் தடுக்கிறது.

இருப்பினும், இதுவரை எந்த ஒரு பறவைகளின் வல்லுநரும் நாரைகள் நீண்ட நேரம் ஒற்றை காலில் நிற்பது பற்றிய உறுதியான தகவலை எந்த ஒரு கோட்பாட்டிலும் அருதியிட்டு கூறவில்லை.

மேலும், நாரைகள் ஒற்றை காலில் நிற்பதற்கு மற்றுமொரு கூடுதல் காரணம் இருக்கலாம். இதில் நீரில் பரவும் ஒட்டுண்ணிகள் மற்றும் பிற ஆபத்துகளை குறைப்பது உள்ளிட்டவை அடங்கும்.

நாரைகள், கொக்குகள் எதனால் ஒற்றை காலில் நீண்ட நேரம் நிற்கின்றன என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!