28.5 C
Chennai
Wednesday, April 17, 2024

வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அரிய வகை பறவை!

Date:

இரு பாலினம் கொண்ட அரிய வகை பாடும் பறவை ஒன்று பென்சில்வேனியாவில் காணப்படுகிறது. இந்த பிரமிக்கத்தக்க, அரிய வகை பறவையின் தோகையின் இருபுறமும் வித்தியாசமான வண்ணங்களில் ஒரு பக்கம் மஞ்சள் நிறத்திலும், மறுபுறம் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இது குறித்து உயிரியல் விஞ்ஞானிகள், இதனுடைய ரோஜா மார்பக க்ரோஸ்பீக் (ஃபியூக்டிகஸ் லுடோவிசியனஸ்) என்பது இருதரப்பு (gynandromorphs) ஜினாண்ட்ரோமார்பி எனப்படும் மரபணு ஒழுங்கின்மையின் விளைவாக இருக்கலாம். இருப்பினும், இரத்த பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மை தன்மை தெரிய வரும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க உறுப்புகளில் மாறுபாடு!

ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் இனப்பெருக்க திசுக்கள் ஹெர்மஃப்ரோடிடிசத்தைப் (hermaphroditism) போலல்லாமல், அவைகளின் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஜினாண்ட்ரோமார்பி போன்று மாறுபட்ட பாலியல் பண்புகள் காணப்படுகின்றது.

அரிய வகை பிரமிக்கத்தக்க பறவையின், ரோஜா மார்பக க்ரோஸ்பீக்கின் ஒரு பக்கம் பெண்ணின் மரபணு தோன்றும் போது, அதன் மறுபக்கம் ஆணின் மரபணு காணப்படுகிறது.

இதனுடைய, இறக்கைகள் மற்றும் வால் ஆகியவற்றில் கூட முக்கியமான பாலியல் வேறுபாடுகள் காணப்படுகின்றது. இதன், இடது புறம் பழுப்பு நிறத்திலும் வலது புறம் கருப்பு நிறத்திலும் உள்ளது.

grosbeak

இந்த வகை பறவைகளில், நாம் கண்டறிந்ததைப் போல, ஜினண்ட்ரோமார்ப்களை மாறுபட்ட பாலியல் பண்புகளைக் கொண்டிருப்பதால், இதன் இடது-வலது பிரிவு அதன் மூளை மற்றும் அதன் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட அனைத்தும் மாறுபட்டு காணப்படுகிறது.

இது குறித்து தகவல் தெரிவித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்னி லிண்ட்சே ”இதுபோன்ற பாடும் பறவை நம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அபூர்வ காட்சி” என்றார்.

grosbeak with gynandromorphs 3

1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பவுடர்மில் ஏவியன் (Powdermill Avian Research) ஆராய்ச்சி மையம் ஒன்றில் ஒரு வருடத்திற்கு சுமார் 13,000 பறவைகள் காணப்படுகின்றன. அவற்றில்,10 க்கும் குறைவான பறவைகளே இது போன்று இரு பாலின பண்புகளை கொண்டு காணப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கடந்த 2005 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ரோஜா மார்பக க்ரோஸ்பீக் (ஃபியூக்டிகஸ் லுடோவிசியனஸ்) ஒன்றில் ஒரு பக்கம் இளஞ்சிவப்பு மற்றும் மறுபுறம் மஞ்சள் நிறம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற விசித்திரமான வண்ணங்கள், ஊர்வன, பட்டாம்பூச்சிகள் மற்றும் ஓட்டுமீன்கள் மத்தியில் பெரும்பாலும் காணப்படும். ஆகையால், இது எவ்வாறு செயல்படுகிறது என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.

grosbeak with gynandromorphs 4

இதற்கு இனப்பெருக்க திறன் உள்ளதா? என்று அறிவியல் ரீதியாக உயிரியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக, வளர்ந்து வரும் இரண்டு கருக்களின் இணைப்பிலிருந்து ஜினாண்ட்ரோமார்ப்ஸ் மூலம் தனித்தனியாக கருவுற்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது விஞ்ஞானிகள் மற்றொரு தகவலை பகிர்ந்துள்ளனர்.பொதுவாக பெண் பறவைகள் ஒரு முட்டையை இடும் போது, டி.என்.ஏ வில் உள்ள குரோமோசோம்களில் பாதி துருவ உடல் (polar body) என்று அழைக்கப்படும் ஒரு பையில் சேமிக்கப்படுவது வழக்கம். அதன் பிறகு முட்டையில் இருக்கும் குரோமோசோம், ஆண் குரோமோசோமுடன் சேர்ந்து கருவை உருவாக்கும்.

PARC விஞ்ஞானிகளின் பரவலான கேள்வி என்னவென்றால், இந்த பாடும் பறவை இனப்பெருக்கம் செய்யும் திறனைக் கொண்டிருக்கிறதா என்பது தான். ஏனெனில், இந்த பறவையின் இடது புறம் பெண் பக்கமாகவும் வலது புறம் ஆண் பக்கமாக இருப்பதால், இது வெற்றிகரமாக ஆண் குரோமோசோமுடன் இணைந்தால் மட்டுமே கருவை உருவாக்கும்.

2019 ஆம் ஆண்டு ஆராய்ச்சியின் படி, மற்றொருதரப்பு விஞ்ஞானிகள், பாடும் பறவை என்பதால் இதன் ஆண் பகுதி பாடல் மூலம் பெண் பகுதியை கவரும் என்கின்றனர். இருப்பினும், இதன் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!