- வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவில் 36,000 வாத்துக்கள் கொல்லப்படவுள்ளன.
- ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களும் நூற்றுக்கணக்கான காகங்கள் மற்றும் 50 மயில்களும் இறந்துபோனதால் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
- ஹிமாச்சல பிரதேசத்திலும் 1800 வாத்துக்கள் பலி.
பறவை காய்ச்சல் கேரளா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கோழிகள், காகங்கள் உள்ளிட்ட பறவைகள் இறந்துவிட்டதால் அச்சம் நாட்டைக் கைப்பற்றியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி , H1N8 வைரஸ் மீண்டும் கேரளாவில் பரவியிருப்பது உறுதிப்படுத்தியுள்ளது.
கேரள வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சர் கே.ராஜு பறவை காய்ச்சல் குறித்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வைரஸ் தற்போது ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மனித பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை.

கேரளாவில் இறந்த 12000 வாத்துக்கள்
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரள மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கண்டறியப்பட்டு கொல்லப்படும். இந்தியா டுடே செய்தியின் படி, 12,000 -க்கும் மேற்பட்ட வாத்துகள் ஏற்கனவே இறந்துவிட்டன.
மேலும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதியில் 1 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளும் கொல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மேலும் 36,000 வாத்துக்கள் பறவை காய்ச்சல் வைரஸ் பரவாமல் இருக்க கொல்லப்படவுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கோழிகளும் கொல்லப்படவுள்ளன.

இருப்பினும், பறவைக் காய்ச்சல் கேரளாவில் முழுவதும் பரவவில்லை. இரண்டு மாவட்டங்களில் பரவியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களும் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துபோனதால் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தோன்றுவது ஒரு “தீவிரமான விஷயம்” என்று கூறி ராஜஸ்தான் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் 1800 வாத்துக்கள் இறந்துள்ளதற்கும் பறவை காய்ச்சல் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பறவைக்காய்ச்சல் (Bird Flu) என்பது என்ன?
H1N8 என்ற வகை வைரஸ் மூலம் பறவைகளை குறிவைத்து தாக்கும் நோய் பறவைக் காய்ச்சல். பறவைக் காய்ச்சல் வைரஸ் (Bird Flu Virus) அல்லது ஏவியன் காய்ச்சல் (Avian Influenza) மிகவும் மோசமான தொற்றுநோயாக அறியப்படுகிறது. இது வைரஸ் தொற்று ஆகும். இது பறவைகள் மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸின் பெரும்பாலான வடிவங்கள் பறவைகளுக்கு மட்டுமே. பறவை காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவம் H5N1.
2014-ல் கேரளாவில் பரவிய வைரஸ்
இந்த ஆண்டு தொடக்கத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிர நோய் பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா 2014 முதல் மீண்டும் மீண்டும் இந்நோய் பரப்பும் வைரஸுடன் போராடி வருகிறது. அதன் பின்னர் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டன.