நெருப்புக்கோழி (Ostrich) பறவை இனங்களில் மிக பெரிய பறவை. நெருப்புக்கோழியின் கழுத்தும் கால்களும் நீண்டு காணப்படும். நெருப்புக்கோழியை தீக்கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் நெருப்புக்கோழி பற்றிய சுவாரசிய தகவல்கள் பார்ப்போம்.
நெருப்புக்கோழி எப்படி இருக்கும்?
நெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப் பெரிய உயிரினம். நெருப்புக்கோழி நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை.
நெருப்புக்கோழி எடை மற்றும் உயரம்
63 முதல் 145 கிலோ எடை கொண்ட பறவை. நெருப்புக்கோழி சுமார் 2.5 மீட்டர் அதாவது, 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.
நெருப்புக்கோழி ஓட்டம்
மணிக்கு 70 கிமீ (43 மைல்) வேகத்தில் ஓடக்கூடியவை. தொடர்ச்சியாக 45 நிமிடம் வரை ஓடக்கூடியது. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரி செய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிமீ (35 மைல்) வேகத்தில் ஓடக்கூடியவை.
நெருப்புக்கோழி இறகுகள்

நெருப்புக்கோழியின் இறகுகள் அலங்காரப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் தொப்பியில் அலங்காரம் செய்யப்படுகிறது.
நெருப்புக்கோழி கால்கள்

நெருப்புக்கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்து, கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டுமே இருக்கும்.
நெருப்புக்கோழி இறைச்சி
பொதுவாக உலகம் முழுவதும் நெருப்புக்கோழி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் நெருப்புக்கோழி இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. தோல் பொருட்கள் தயாரிப்பதற்கும் அலங்காரப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.
நெருப்புக்கோழி முட்டை

பல பெண் தீக்கோழிகள், தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இந்த முட்டைகளை பகலில் பெண் தீக்கோழிகளும் இரவில் ஆண் தீக்கோழிகளும் அடை காக்கும். குஞ்சு பொரித்து வெளிவர 42 முதல் 46 நாட்கள் ஆகலாம். பறவையினங்களில் தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். முட்டை 1.4 கிலோ எடையும் 15 செ.மீ அளவும் கொண்டது.
நெருப்புக்கோழி குடும்பம்

தீக்கோழிகள் கூட்டுக் குடும்பமாக வாழும். தீக்கோழிகள் பொதுவாக சுமார் பத்து தீக்கோழிகள் ஒன்றாக வாழ்கின்றன. அவை ஒரு மேலாதிக்க ஆண் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் பெண் தலைமையிலானது. ஆதிக்கம் செலுத்தும் ஆண் இருப்பிடத்தை பாதுகாக்கும். ஆண் தீக்கோழி எச்சரிக்கை அழைப்பு சத்தமாகவும் ஆழமாகவும் இருக்கும். தூரத்திலிருந்து கேட்கும்போது சிங்கத்தின் கர்ஜனை போன்று இருக்கும்.
நெருப்புக்கோழி எவ்வளவு காலம் வாழும்?
நெருப்புக்கோழி 40- 45 ஆண்டுகள் வரை வாழும். ஆப்பிரிக்காவின் வறண்ட, சூடான சவன்னாக்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்கின்றன.
தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது. தாவரங்கள், விலங்குகள், கிழங்குவகைகள், இலைகள், பழங்கள், கொட்டைகள்,வெட்டுக்கிளி, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், ஊர்வன இனங்களை நெருப்புக்கோழி விரும்பி சாப்பிடும். தண்ணீர் தேவைப்படுவதில்லை தாவரங்களிலிருந்தே தண்ணீரை எடுத்துக்கொள்கிறது.
நெருப்புக்கோழி இனச்சேர்க்கை
ஒரு பெண் நெருப்புக்கோழி கவனத்தைப் பெற, ஆண் நெருப்புக்கோழி தன் தலையைக் காண்பிப்பதற்காக தலை குனிந்து இறக்கைகளை வெளிப்புறமாக மடக்குகிறது. துணையுடன் தயாராக இருக்கும்போது, ஆணின் அலகு மற்றும் தாடைகள் சிவப்பு நிறமாக மாறும். சில நேரங்களில், கழுத்து பொருந்தும் வகையில் சிவப்பு நிறமாக மாறும். துணையும் தயாராக இருக்கும்போது பெண் நெருப்புக்கோழி நிறத்தை மாற்றுகிறது.
நெருப்புக்கோழியின் நிறம்
ஆண் நெருப்புக்கோழிகள் கறுப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழிகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
Also Read: கொக்கு, நாரை ஒற்றைக் காலில் நிற்பது ஏன்? காரணம் தெரியுமா?
சிட்டுக்குருவி பற்றி உங்களுக்கு தெரியாத 9 உண்மைகள்!
மயில் பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான 14 உண்மைகள்! மயில் சத்தம், இனப்பெருக்கம் உள்ளிட்ட…