ஓசனிச்சிட்டு மிகச் சிறிய பறவையினம். கூர்மையான அலகு உள்ளது. பல வண்ண நிறங்களில் மிளிர்ந்தும் காணப்படும். ஓசனிச்சிட்டுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த ஓசனிச்சிட்டுகள் வட மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் மட்டுமே காணப்படும் பறவைகள்.
ஓசனிச்சிட்டு உடலமைப்பு

வலுவான தசைகள் கொண்ட உடல்கள் மற்றும் நீண்ட கத்தி போன்ற இறக்கைகள் கொண்டவை. மற்ற பறவைகளின் இறக்கைகள் போலல்லாமல், தோள்பட்டை மூட்டில் இருந்து உடலுடன் இணைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகள் முன்னோக்கி மட்டுமல்ல, நேராக மேலும் கீழும், பக்கவாட்டிலும், பின்னோக்கியும் பறக்கவும் முடியும். ஒரு ஓசனிச்சிட்டு அதன் இறக்கைகளை துடிக்கும் விகிதம் திசை பறவையின் அளவைப் பொறுத்து மாறுபடும் – பெரிய பறவை, குறைந்த விகிதம். இதன் விளைவாக, மிகச்சிறிய ஹம்மிங் பறவைகள் மிக விரைவான இறக்கை துடிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன.
ஓசனிச்சிட்டு வகைகள்
ஓசனிச்சிட்டுகள் 320 வகைகள் உள்ளன. அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் 12 இனங்கள் காணப்படுகின்றன.
ஓசனிச்சிட்டு எடை

அனைத்து வகையான ஓசனிச்சிட்டுகளும் சிறியவை. ஒரு இனம் மட்டுமே பெரிய இனம் (Patagona gigas) சுமார் 20 செ.மீ நீளம் கொண்டது. உடல் எடை சுமார் 20 கிராம் மிகச்சிறிய இனமான தேனீ ஓசனிச்சிட்டுகள் 5.5 செ.மீக்கு சற்று அதிகமாக இருக்கும். இதில் அலகு மற்றும் வால் பாதியாக இருக்கும். சுமார் 2 கிராம் எடையுள்ள, இந்த இனம் வாழும் பறவைகளில் மிகச்சிறியது. ஓசனிச்சிட்டின் அலகு, நீண்டதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
ஓசனிச்சிட்டு இதயம்
ஒரு ஓசனிச்சிட்டின் இதயம் ஓய்வில் இருக்கும் போது நிமிடத்திற்கு 225 முறை துடிக்கிறது. பறக்கும் போது நிமிடத்திற்கு 1,200 முறைக்கு மேல் துடிக்கிறது.

தன் நீண்ட நாக்கின் மூலம் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சுகிறது. பறந்துகொண்டே தேனை உறிஞ்சியும் பூக்களில் இருந்து வேறு பூக்களுக்கு நகர்ந்தும் தேனை குடிக்கிறது. ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 பூக்களைகடந்து செல்கின்றன. சிறு பூச்சிகள், கொசுக்கள், எறும்புகள், சிறு வண்டுகள், போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறன.
ஓசனிச்சிட்டு ஆண் பெண் வேறுபாடு
பாலினம் ஒரு சில இனங்களில் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும் பெரும்பாலான இனங்களில் வித்தியாசமாக இருக்கும். ஆண்கள் பல நிறங்களில் மிளிரும் உடலமைப்பு கொண்டுள்ளன. பெண்கள் அப்படி இருக்காது.
ஓசனிச்சிட்டு வாழ்விடம்
தென் அமெரிக்காவில் பல்வேறு எண்ணிக்கையிலான இனங்கள் காணப்படுகின்றன. ஓசனிச்சிட்டின் கூடு ஒரு சிறிய கோப்பை போன்று காணப்படும். பெண் ஓசனிச்சிட்டுகளே தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்ளும்.
ஓசனிச்சிட்டு இனப்பெருக்கம்

ஆண் பறவைகள் பெண் பறவைகளை ஈர்க்க அவற்றை சுற்றி வரும். தன் இனம் அல்லது வேறு இனத்துடன் இணையும். பெரும்பாலும் 2 முட்டைகள் இடும். அரிதாக 1 முட்டையும் இடும். 15 முதல் 20 நாட்கள் அடைகாக்கும். முட்டையின் எடை பெண் ஓசனிச்சிட்டின் உடலில் 10 சதவிகிததிற்கு சமமானது. ஆண் ஓசனிச்சிட்டு குஞ்சுகளை வளர்ப்பதில் ஈடுபடுவதில்லை. மேலும் குஞ்சுகள் பொரித்த பிறகு மற்றொரு துணையை கண்டுபிடிக்கும். குஞ்சு பொரித்த பிறகு, குட்டி ஓசனிச்சிட்டுகள் மூன்று வாரங்கள் கூட்டில் இருக்கும்.
ஓசனிச்சிட்டு வேறு பெயர்கள்
தமிழில் ஓசனிச்சிட்டை தேன்சிட்டு, தாரிச்சிட்டு, தும்பிச்சிட்டு, முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்கார சிட்டு என்றும் அழைக்கிறார்கள்.
ஓசனிச்சிட்டு பாடும் பறவைகள்

பல இனங்களில் வால் இறகுகள் ஒலிகளை உருவாக்குகின்றன. இறக்கைகளை விரித்து ரீங்காரமிடும்.
ஓசனிச்சிட்டு வாழ்நாள்
சராசரியாக 5 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இயற்கை பேரழிவு, வாழ்விட இழப்பு, அலங்காரப்பொருட்கள் தயாரிப்பதிலும் மற்றும் வேறு சில காரணங்களால் ஓசனிச்சிட்டுகளின் எண்ணிக்கை குறைகிறது என்று ஆய்வு கூறுகிறது.
Also Read: உலகின் மிகவும் அழகான 10 கிளி வகைகள்..