ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தில்லுமுல்லு வேலை – 500 கோடி அபராதம்!!

0
59
vwg-opener
Credit: Fortune

கார் உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்த ஃபோக்ஸ்வேகன் தற்போது பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டித் தவிக்கிறது.

volkswegan
Credit: dw.com

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் கார் பரிசோதனையின் போது மற்ற எந்த காரையும் விட 40% அதிகம் கரியமில வாயுவை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உலகமெங்கிலும்இருந்து சுமார் 1 கோடி வாகனங்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மோசடி

புகைமாசை குறைப்பதற்கான பிரத்யேக கருவி ஒன்றினைப் போருத்தியிருப்பதாக விளம்பரம் வேறு விட்டு தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டது அந்நிறுவனம். கருவி இருந்தது எல்லாம் உண்மைதான் ஆனால் அவை மாசுபாட்டை அதிகரித்திருக்கின்றன. ஆய்வின் முடிவு வெளியிட்ட தகவல் இது.

புகை மாசு முறைகேட்டில்  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஈடுபட்டதா என ஆய்வுகள் நடத்தப்பட்டன. டீசல் கார்களில் மாசுக்கட்டுப்பாடு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான கருவி ஒன்றை அந்த நிறுவனம் பொருத்தியது தெரிய வந்தது.

இதனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்ககூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பலர் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தனிக்குழு ஒன்றினை அமைக்க உத்தரவிட்டது.

volkswagen-emission-testing
Credit:Los Angeles Times

ஆட்டோமோடிவ் ஆய்வுக்கான இந்திய கூட்டமைப்பு மற்றும் தேசிய பசுமை பொறியியல் ஆய்வு அமைப்பு உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு போக்ஸ்வேகன் கார்கள் டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிட்டதை உறுதி செய்தது. மேலும் இந்தக்குழு போக்ஸ்வேகன் நிறுவனம் 171 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த பரிந்துரைத்தது.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்கால உத்தர பிறப்பி்த்திருந்தது.

500 கோடி

வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்,  ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான உபகரணத்தை பொருத்தியதால் 500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

vwg-opener
Credit: Fortune

காற்று மாசுபட்டு ஆய்வுகளில் சிக்கிய உடனே கார்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தால் இந்த சிக்கலை போக்ஸ்வேகன் நிறுவனம் சமாளித்திருக்கலாம். விதி யாரை விட்டது?