ஜெர்மனியின் முனிச் (MUNICH) பகுதியில் இருக்கிறது ADAC பரிசோதனை நிறுவனம். 1903ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கார்களுக்கான பல்வேறு பரிசோதனைகளைச் செய்து அதன் முடிவுகளின் படி சான்றளிக்கும். உலகின் முன்னணி கார்கள் இங்குதான் பரிசோதனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த டாடா குழுமம் தங்களது எஸ்.யூ.வி காரான நெக்ஸானை பரிசோதனைக்கு உட்படுத்தியது.

பரிசோதனை
ADAC க்கென பரிசோதனை வழிமுறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் விதிமுறைகளின் படி மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காரை இயக்கச் செய்வர். தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் ஒன்றில் கார் மோதும்போது, ஏற்படும் சேதத்தின் அளவுகளை வைத்து தரச்சான்றிதழ் அளிக்கப்படும். இப்படி பரிசோதிக்கப்பட்ட நெக்ஸானிற்கு 4 ஸ்டார்களை அளித்திருக்கிறது அந்நிறுவனம். இதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவின் பாதுகாப்பான காராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- டாடா நிறுவனத்தின் ஸ்செஸ்ட் (Tata Zest)
- டோயோட்டா நிறுவனம் தயாரித்த எட்டியோஸ் (Toyota Etios)
- வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ (Volkswagen Polo).
நெக்ஸான் இவ்விருதை பெறுவதற்கு முக்கிய காரணம், அதில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்குகள், சீட் பெல்ட் வித் ப்ரி டென்ஷனர் ஆகும். இப்பரிசோதனை எஞ்சின் மற்றும் காரின் முன்பகுதியில் கடும் சேதத்தை விளைவித்தாலும், கேபின் உள்ளே எவ்வித சேதமும் ஏற்படவில்லை. A பில்லரில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், அதன் உறுதித்தன்மையின் காரணமாக எவ்வித வளைவோ, உருமாற்றமோ நடைபெறவில்லை!!

சர்வதேச அளவில் கார்களுக்கான பாதுகாப்பு மற்றும் பரிசோதனை மையமான NCAP நெக்ஸானை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை, நெக்ஸானில் பயணிகளுக்கு கழுத்து மற்றும் தலையில் தாக்குதல் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறுகிறது. மேலும், பயணிகளின் நெஞ்சுப்பகுதிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.
நான்கு வருடம் கழித்து இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் என NCAP யால் சான்றிதழ் பெற்ற முதல் கார் என்ற பெருமையும் நெக்ஸானயே சேரும்.
NCAP யின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 கார்களுடன் போட்டியிட்டு நெக்ஸான் முதலிடத்தைத் தட்டிச் சென்றிருக்கிறது. விதிமுறைகள் மாற்றப்பட்ட பின் இந்தியாவில் பல கார்கள் இச்சான்றிதழுக்காகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. நான்கு வருடம் கழித்து இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் என NCAP யால் சான்றிதழ் பெற்ற முதல் கார் என்ற பெருமையும் நெக்ஸானயே சேரும்.