இந்தியாவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டாடா, தங்களது டிகோர் எலெக்ட்ரிக் காரினை (Tigor Electric Car) விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. முழுவதும் மின்னாற்றலில் இயங்கக் கூடிய இக்கார் இன்னும் இரண்டு மாதங்களில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் !!
இந்தக் காரில் 30kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அதிகபட்சமாக 130 கிமீ தூரம் வரை இந்தக் காரினால் பயணிக்க முடியும். மணிக்கு 100 கிமீ வேகம் வரையிலும் செல்லலாம். மேலும், இந்தக் காரில் 72V பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் ஃபாஸ்ட் சார்ஜரும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பேட்டரியை 1.5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். எலெக்ட்ரிக் மோட்டார் சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.
புறத்தோற்றம்!!
வெளிப்புறத்தில் ஆங்காங்கே நீல வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது முத்தாய்ப்பாகத் தெரிகிறது. மேலும், காரின் முன்புறத்தில் உள்ள கிரில் அமைப்பில் EV (Electric Vehicle) என்ற முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண கூரை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. காரின் வெளிப்புறத்தில் விசேஷ டீகெல் எனப்படும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருப்பது பழைய காரிலிருந்து வெட்டுப்படுத்திக் காட்டுகிறது.

விற்பனை
11 லட்சம் விற்பனை விலையில் அடுத்த மாதத்திலிருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இஇசிஎல் (EESL)Energy Efficiency Services Limited அமைப்பிற்கு டிகோர் எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. தனிநபர் விற்பனைக்கும் அந்நிறுனம் தயாராகி வருகிறது.
இம்மாதம் முதல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டமான ஃபேம் II (Fame II) அமலிற்கு வருகிறது. அதன் அறிமுகத்திற்குப் பின்னர், டிகோர் எலெக்ட்ரிக் காரினை டாடா நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மின்னாற்றலினால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டமே ஃபேம் II (FAME) (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles)ஆகும்.
- எரிபொருள் பற்றாக்குறை, வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவற்றை முழுவதும் நீக்கும் விதமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
- இத்திட்டத்திற்கென 5500 கோடி ருபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.