தேவை குறைவாக இருக்கும் போது அளவுக்கு அதிகமாகத் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் வர்த்தக ரீதியாக தோல்வியைச் சந்தித்துவிடும். தயாரிக்கப்படும் பொருளின் விலை அதிகம் என்றால் அவ்வளவுதான். சில பொருட்களை சில வருடங்கள் வரை விற்காமலேயே பத்திரப்படுத்தி, தேவை அதிகரிக்கும்போது விற்றுவிடலாம். ஆனால் எவ்வளவு நாட்கள் என்பது மிக முக்கியம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 2009 ஆம் ஆண்டு அதிகரித்த கார் மோகம் இன்று மிகப்பெரிய துருத் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளது. உண்மைதான். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தயாரித்த பல லட்சக்கணக்கான கார்களை விற்க வழியில்லாமல் நிறுத்தியே வைத்திருக்கின்றன அந்தந்த தொழிற்சாலைகள்.

அனைத்துக் கார்களையும் பாதுகாக்க முடியாமல் வெட்ட வெளியில் நிறுத்தியிருக்கிறது அந்த நிறுவனங்கள். இதனால் மழை மற்றும் வெயிலினால் இந்த கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தள்ளுபடி மற்றும் கார்களின் விலைக்குறைப்பிலும் இந்த நிறுவனங்கள் நாட்டம் செலுத்தவில்லை. அதற்குப் பின்னால் ஒரு உளவியலும் உள்ளது. தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்தக் கார்களை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். இதனால் இதன் விலைகளை மிகவும் குறைக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யும் பட்சத்தில் அடுத்த முறை அதே நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் புதுக்கார்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். அதனால் தான் இவ்வளவு கார்களும் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வாகனங்களில் பயன்படுத்தியிருக்கும் உதிரிப்பொருட்கள், மனித ஆற்றல், மின்சாரம் என வீணானவற்றின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றன. சரி, இனி எந்தெந்த நாடுகளில் இப்படி வாகனக் குவியல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகணத்தில் தேவைக்கு அதிகமாகத் தயாரித்த கார்கள் வீணாய் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே இவை.

கார்பி மாகாணத்தில் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் அடுக்கப்பட்டிருக்கும் கார்களின் எண்ணிக்கையைக் கவனியுங்கள்.

அமெரிக்கா
இந்த உபரி உற்பத்திக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அந்நாட்டின் பால்டிமோர் மற்றும் மேரி லேண்ட் ஆகிய நகரங்களிலும் இதே கதைதான். அடுத்து நீங்கள் பார்க்கப்போவது அவைகளைத்தான். இந்த இடத்தில் மட்டும் 57,000 கார்கள் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு கார்கள் விற்பனையாகாமல் இருந்தாலும் இன்னும் அந்தந்த நிறுவனங்கள் கார் தயாரிப்பை மட்டும் நிறுத்தவில்லை.

இந்த தொழிற்சாலைகளை நம்பி ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் நிறுவனங்களை மூடுவதில் பல விதிமுறைகளை விதித்துள்ளது அந்த நாடு.
ஸ்பெயின்

ஸ்பெயினில் உள்ள வேலன்சியா துறைமுகத்தில் இறக்குமதியான கார்களை வைக்க இடமில்லாமல் அங்கேயே நிறுத்தியிருக்கும் கார் நிறுவனங்கள்.

இத்தாலி
இத்தாலியில் உள்ள சிவிடாவெச்சியா துறைமுகம் முழுவதும் பயன்படாத நிலையில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் கார்கள்.

ரஷியா

இவ்வளவு கார்களும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கடும் சேதமடைந்திருக்கின்றன. பல கார்கள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. எதிர்காலத்தில் இந்த உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளுள் கழிவு மேலாண்மையே முதல் இடத்தில் இருக்கப்போகிறது. காந்தி கூறியதைப்போல் இந்த உலகத்தில் உள்ள குப்பைகளைக் கொட்டுவதற்கு நமக்கு இன்னும் இரண்டு உலகங்கள் தேவைப்படும். எனவே மறுசுழற்சியை நோக்கி மனிதர்கள் தீவிரமாக இயங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதே நிதர்சனம்.