வெளிவந்தது முதல் இன்று வரையிலும் சிறப்பாகவே விற்றுவந்த மாருதி ஆம்னி தன் 35 வருட ஓட்டத்தை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறது.
மாருதியின் முதல் காரான மாருதி 800 வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து 1984-ம் வருடம் மாருதி, ஆம்னி காரை தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஒரு கூட்டு குடும்பம் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், எளிமையான தோற்றத்துடனும் விளங்கியது ஆம்னி.
ஒரு கூட்டு குடும்பம் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், எளிமையான தோற்றத்துடனும் விளங்கியது ஆம்னி. இதனால் விரைவிலேயே வெற்றிகரமான காராக மாறியது. இந்நிலையில் மாருதி, ஆம்னியின் 35 ஆண்டு கால வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு அதன் உற்பத்தியை நிறுத்த உள்ளது.

என்ன காரணம்?
இந்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ்(ABS), ஏர் பேக்(Air Bag) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த வசதிகளை ஆம்னியில் செய்ய முடியாததால் தான் அதன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
பாதுகாப்பான பயணம், சாலைகள் கட்டமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆம்னி கார் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நானோ காரின் உற்பத்தியையும், விற்பனையையும் டாடா நிறுவனம் 2020 முதல் நிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை கீழே உள்ள பதிவில் காணலாம்.
இது டாடா நானோ-விற்கு டாட்டா சொல்லும் நேரம்..!
ஆம்னிக்கு மாற்று என்ன?
மாருதி இந்தியா நிறுவனம், ஏபிஎஸ்(ABS), ஏர் பேக்(Air Bag) பொருத்தப்பட்ட Eeco என்ற எம்.பி.வி ரக காரை சில நாள்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் அசிஸ்டெண்ட், கூடுதல் சீட் பெல்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

மேலும் பல கார் நிறுவனங்கள் பழைய கார்களின் உற்பத்தியையும் விற்பனையையும் விரைவில் நிறுத்தக்கூடும்.