நாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை நடத்தியது. ஒருவர் மட்டும் அமர்ந்து பறக்கும் இந்த கார், பார்க்க நல்ல தோற்றத்தை கொடுக்கிறது.
மின்னீ (ட்ரோன்) போல தோற்றமளிக்கும் இந்த வாகனம் ஒருவர் மட்டும் அமர்ந்து ஓட்டக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கார், நான்கு நிமிடங்கள் மட்டும் பறந்தாலும், இது ஸ்கைட்ரைவில் நம்ப முடியாத சாதனை.

உலகின் மிகச்சிறிய பறக்கும் மின்சார கார் இது. electric Vertical Take-off and Landing (eVTOL) செய்யக்கூடிய இந்த SkyDrive’s, SD-03 இரண்டு கார்கள் நிறுத்தப்படும் இடத்தை எடுத்துக்கொள்கிறது. நேர்த்தியான இயந்திரங்களால் இயக்கப்படும் எட்டு ரோட்டர்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அவசர கால சூழலில் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
சோதனை ஓட்டத்தில் இது நம்ப முடியாத சாதனை என்றாலும், இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் படி செய்யப்பட்டுள்ளது.
இதை 30 நிமிடங்கள் வரை பறக்கச் செய்ய முடியும் என்று ஸ்கைட்ரைவ் தலைவர் டோமோஹிரோ ஃபுகுசாவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பறக்கும் கார் 2023 க்குள் சந்தைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.