உலகத்தின் அதிவேக புல்லட் ரயிலை ஒருவழியாக ஜப்பான் தயாரித்து விட்டது. மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ரயிலானது இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. ஜப்பானின் ஷின்கான்சென் ரயிலைத் தான் அதிவேக புல்லட் ராயிலாக மாற்றியிருக்கிறது ஜப்பான். இதன் தற்போதைய பெயர் ஆல்பா – எக்ஸ் (Alpha – x) இந்த ரயிலின் தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த வெள்ளியன்று இந்த இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்கு தயாரானது. எந்தவித சிக்கலுமின்றி சோதனையில் வெற்றி பெற்ற இந்த ரயில் வரும் 2030ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சீனாவின் அதிவேக புல்லட் ரயிலான ஃபக்சிங்கை காட்டிலும் ஜப்பானின் இந்த ஆல்பா – எக்ஸ் மணிக்கு பத்து கிலோமீட்டர் அதிகமாக செல்லக்கூடியது. இந்த ரயிலின் முன்பக்கத்தை வடிவமைக்க சுமார் 10 கார்களின் டிசைன்களை அலசியுள்ளது இந்த பொறியாளர்கள் குழு. ஜப்பானின் செண்டாய் மற்றும் அமோரி மாகாணங்களுக்கு இடையே இந்த ரயிலானது இயக்கப்பட இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்திருக்கிறது.
போக்குவரத்து துறை வளர்ச்சியில் இந்த அதிவேக புல்லட் ரயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணிக்கிறார்கள். இதேபோல் ஜப்பானின் மற்றுமொரு அதிவேக புல்லட் ரயிலான ஷின்கான்சென் N700S மாடலும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலானது 2020ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது இந்த ரயிலும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் காந்த விலக்கத்தின் அடிப்படையில் செயல்படும் ஜப்பானின் Maglev ரயில் தான் உலகின் அதிவேக ரயில் என்னும் பெருமையை தன்வசம் வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு சோதனை ஓட்டத்திற்குத் தயாரான இந்த ரயில் மணிக்கு 63 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது இதனை மிஞ்சுவதற்கு தொலைபேசியில் வெறும் தரையிலும் இதுவரை பிறக்கவில்லை என்பதே உண்மை.