ஓட்டுநர் உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி ?

0
527

வாகன ஓட்டுநர்களுக்கு இன்றைய போக்குவரத்து நெரிசலில்  வண்டி ஓட்டுவதில் கூட பதற்றமில்லை. ஆனால் காவல்துறையினரிடம்  சிக்கினால் சேதாரம் தான் என்ற பதற்றமே அதிகம் நிலவுகிறது என்பது தான் உண்மை.

வாகன ஓட்டுனர்களுக்குத் தேவையான முக்கியமான சான்றிதழ்களில் ஒன்று ஓட்டுநர் உரிமம் (Driving Licence) . அதற்கு விண்ணப்பிக்க ஏகப்பட்ட வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தாலே நாம் சோர்ந்து விடுகிறோம். ஆனால் இப்போது உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இணைய தளத்திலேயே  விண்ணப்பித்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது போக்குவரத்துக் கழகம்.

இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

– முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

– வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
– உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.
– திரையின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.
– “அப்ளை ஆன்லைன்”(Apply Online) என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள்.
– இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும்.
புது கற்றுநர் உரிமம் (New Learner Licence), புது ஓட்டுநர் உரிமம் (New Driving Licence), ஓட்டுநர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)  என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.

முக்கிய குறிப்பு 1:  முதல் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு முன் கற்றுநர் உரிமம் வாங்குவது மிக அவசியம்.

முக்கிய குறிப்பு 2:  உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தின் போலியை வாங்க இங்கேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

 

செயல்முறை

முதலில் உங்கள் கற்றுநர் உரிமம் வாங்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.

செயல்முறை 1: 

– புது கற்றுநர் உரிமம் (New Learner Licence) என்பதைத் தேர்வு செய்யவும்.
– உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான படிவம் இப்பொழுது வரும்.
– உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யவும்.
– உங்கள் சேவையையும் தேர்வு செய்யுங்கள்.

செயல்முறை 2: 
– இப்பொழுது உங்களுக்கான கற்றுநர் உரிம விண்ணப்பப் படிவத்தில் தெரியும், (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுநர் உரிமம் இல்லை என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள்
– இறுதியாக சப்மிட் என்பதை  கிளிக் செய்யுங்கள்.

படிவம் 1:

இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுநர் உரிம விண்ணப்பப் படிவத்தில்  பதிவேற்றம் செய்யுங்கள்.

– இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கான ஒப்புகைச் சான்றிதழ் கிடைக்கும். அதை நகலெடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று  உறுதி செய்துகொள்ளுங்கள்.

படிவம் 2:

உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாளச்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுங்கள்.

உங்கள் பதிவேற்றம் சீராக நடந்தபின் உங்களுக்கான ஒப்புகை உறுதி செய்யப்படும். இப்பொழுது உங்களுக்கான ஒப்புகைச்  சான்றிதழை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி உங்கள் கற்றுநர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இதே வழிமுறைப் படி உங்களுக்கான புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தை புதியதாய் வாங்கிக் கொள்ளவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதே போல் பழைய ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தும் கொள்ளலாம்.