இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, தசரா, நவராத்திரி என வரிசையாகப் பண்டிகைகள் வரவிருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தை ஒட்டி சந்தையில் புதிய கார்களை விற்பனைக்கு இறக்க பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்தியாவில் 26 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தான் அதிகக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. இதற்கு முக்கியக் காரணம் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளே. இதன் மூலம் பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கார்களை சந்தைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

அதிக விற்பனை!
2017 – ஆம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் மாத காலத்தில் இந்தியாவில் கார் விற்பனை வளர்ச்சி 7.29% ஆக இருந்தது. ஆனால் இந்த வருடம் வளர்ச்சி 13.32% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வருடா வருடம் இந்தியாவில் மொத்த கார் விற்பனை வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.
சென்ற வருடம் இதே மாதங்களில் வெளியான புதிய கார்களின் எண்ணிக்கை 17 மட்டுமே. ஆனால், இவ்வருடம் அந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்திருக்கிறது. சுஸுகி நிறுவனம் தங்களது வேகன் ஆர் ஐ (Suzuki- Wagon R) ஸ்பெஷல் எடிஷனாக வெளியிடுகிறது. ஜெர்மெனியச் சேர்ந்த Porsche தங்களது சொகுசுக் காரான Cayenne யை விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது.

இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் வெளியாக இருக்கும் சில முக்கியக் கார்களின் பட்டியலைக் கீழே காணலாம்.
மாதம் | நிறுவனம் | மாடல் | விலை (லட்சங்களில் ) |
---|---|---|---|
ஆகஸ்ட் | Maruti Suzuki | 2018 Maruti Suzuki Ciaz Facelift | 8-12 |
செப்டம்பர் | Ford | Ford Figo | 4.8-7.8 |
செப்டம்பர் | Ford | Ford Figo Aspire | 5-9 |
செப்டம்பர் | Nissan | Datsun Go | 4.8 |
செப்டம்பர் | Nissan | Datsun Go+ | 5.3 |
செப்டம்பர் | Mahindra | Mahindra Marazzo | 10-11 |
செப்டம்பர் | Mahindra | Mahindra S 201 | 9.99 |
செப்டம்பர் | Mahindra | Mahindra G4 Rexton | 20 |
செப்டம்பர் | Mercedes-Benz | Mercedes-Benz E-Class All Terrain | 60-65 |
செப்டம்பர் | Porsche | Porsche Cayenne | 235 |
அக்டோபர் | Hyundai | Santro | 3-5 |
அக்டோபர் | Maruti Suzuki | Maruti Suzuki Ertiga | 7-11 |
அக்டோபர் | Mahindra | Mahindra S201 | 7-11 |
அக்டோபர் | Tata | Tata Tiago JTP | 5.99 |
அக்டோபர் | Tata | Tata Tiagor JTP | 6.99 |
நவம்பர் | Maruti Suzuki | Maruti Suzuki Wagon R | 4-6 |
இந்த வருடமும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பல கார்களில் இருந்து தங்களுக்குத் தேவையான காரினைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகமாகும். இந்த ஆண்டு விற்பனையில் முதலிடத்தைப்போகும் நிறுவனம் எது? மற்றும் எந்தக் கார் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.