கதைகளாகும் வாழ்க்கை தாத்தா - பாட்டி கதை அப்பா - அம்மா கதை சித்தப்பா - சித்தி கதை அத்தைகள் கதை மாமாக்கள் கதை அண்ணன் - தம்பி கதை அக்கா - தங்கை கதை நண்பர்கள் கதை பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் கதை எதிர் வீட்டுக்காரர்கள் கதை எதிரிகள் கதை பள்ளிப் பருவ கதை பால்ய காலக்கதை காதலித்த கதை பணிபுரிந்த கதை திருமணமான கதை அப்பா - அம்மா ஆன கதை தாத்தா - பாட்டி ஆன கதை என கதைகளால் நிரம்பியதுதான் வாழ்க்கை! கதைகளாகவும் ஆகப்போகும் வாழ்க்கை!! சிலர் கதை மட்டும் பெருங்காவியங்களாகவும் பலர் கதைகள் குறுந்தகவல் போலவும் பிறர் கதைகள் காணாமலே போவதும் அவரவர் வாழ்ந்ததையும் வாழ்வதையும் பொறுத்தே அமைகிறது! - அருண் விஜயரெங்கன்
கதைகளாகும் வாழ்க்கை
Date: