ஒரு போர். 85 லட்சம் பேரின் மரணத்திற்குக் காரணமான வரலாற்றின் பக்கங்களில் ரத்தகறை படிந்த நிகழ்வு. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் காயமுற்று, ஊனமுற்றுப் போவதற்கு காரணமாக இருந்த போர். ஐரோப்பியாவின் நிலப்பரப்பில் குட்டி குட்டி நாடுகள் உதிப்பதற்கு காரணமாக இருந்த சரித்திரத்தின் மிகப்பெரிய போர்.

இரண்டாம் உலகப்போரைப் பற்றி இதுவரை எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்புகள், வின்ஸ்டன் சர்ச்சிலின் அதிரடி முடிவுகள், ஸ்டாலினின் யுக்தி, ரூஸ்வெல்ட்டின் தந்திரம் என வாய்ப்பிருக்கும் எல்லா கோணங்களிலும் இரண்டாம் உலகப்போர் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
போர் என்பது எந்த அளவிற்கு வாழ்க்கையை சிதைக்கும் என்பதற்கு பல புகைப்படங்கள் இன்று இணையத்தில் இருக்கின்றன. தாக்குதலின் உச்சத்தை, பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறலை, பசியின் பிடியில் சிக்கி திசையைத் தொலைத்து நிற்பவர்களின் உருவங்களை இந்த புகைப்படங்கள் நம் கண்முன்னே கொண்டுவருகின்றன.
கலர் படங்கள்
ஒரு போர் வீரனின் பார்வையில் இந்தப்போர் எப்படி நிகழ்ந்திருக்கும்? லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. அவை இதைத்தான் பேசுகின்றன. இதில் விசேஷம் என்னவெனில் இவை அனைத்துமே கலர் புகைப்படங்கள்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்களுள் கலர் புகைப்படங்கள் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமானவற்றை கீழே காணலாம்.
லான்ஜெஸ்டர் பாம்பர் (Lancaster bomber) என்னும் போர்விமானம் தனது 100 வது தாக்குதலை வெற்றிகரமாக முடித்து படைக்குத் திரும்பியதை அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடும் காட்சி தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் பாலைவனத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் பறப்பதற்கு ஆயத்தமாகும் காட்சிகள் கீழே இருக்கிறது.

பிரான்சைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது போர் விமானத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் 1944 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. விமானத்தில் எத்தனை தாக்குதல்களில் என்னென படைகளை அழிக்கப்பட்டிருகிறது என குறிப்பிட்டிருக்கிறார்கள் இதில். அந்தக்காலத்தில் இது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள் போல கருதப்பட்டது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகணத்தில் உள்ள போர் விமானிகள் தங்களது உணவு இடைவேளையை மகிழ்ச்சியாக கழிக்கும் தருணத்தை புகைப்படமாக எடுத்தவருக்கு விருதே கொடுக்கலாம்.

தென்ஆப்பிரிக்காவில் இருக்கும் தெற்கு ரொடீசியா ஒரு காலத்தில் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் போர் பயிற்சி முகாம் ஒன்றினை அங்கே துவங்கிய இங்கிலாந்து பல வீரர்களை அங்கிருந்து போர்க்களத்திற்கு அனுப்பிவைத்தது. அந்த போர் விமான பயிற்சிப் பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
