அமெரிக்காவின் வானியல் ஆராய்ச்சி அமைப்பான நாசா விண்வெளி ஆராய்ச்சியில் கால்பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சென்ற வருடம் அந்நாட்டு அரசு கோலாகலமாகக் கொண்டாடியது. மேலும் நாசாவினுடைய முதல் நிலவுப்பயணம் நடைபெற்று 50 ஆம் வருடம் இந்த ஆண்டில் கொண்டாடப்படுகிறது. இதற்காக வானியல் ஆராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட மிகமுக்கிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளது நாசா.
நிலவில் முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் ஆல்ட்ரின் தான்.
400 புகைப்படங்கள்
முக்கியமானவை எனத் தொகுக்கப்பட்ட 400 புகைப்படங்களில் சிலவற்றை மட்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது நாசா. வானியல் ஆராய்ச்சியை தொடர்ந்து கண்காணித்துவருபவரும், பிரபல எழுத்தாளருமான பியர்ஸ் பைசோனி (Piers Bizony) பாதுகாப்புக் காரணங்களுக்காக சில புகைப்படங்களை நாசா தவிர்த்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நாசாவிடம் துவக்கத்தில் விண்வெளியில் புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறது. முதல் பயணத்தை முடித்து பூமி திரும்பிய வீரர்களிடம் விண்வெளி பற்றியும், அங்கு நிகழ்ந்தவை பற்றியும் ஏராளமானோர் கேள்வி கேட்கத் தொடங்கினர். அதன்பிறகே தன்னுடைய நிலவுப் பயணத்திற்கு புகைப்படக்கருவி ஒன்றினையும் அனுப்பியது நாசா.
முதல் மனிதன்
மேலே இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். பெரும்பாலானோர் இதுவரை நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் இதுவென நினைத்து வந்தார்கள். ஆனால் அது பஸ் ஆல்ட்ரின் ஆவார். (நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பயணித்த மற்றொரு வீரர்) இந்தப்புகைப்படத்தை எடுத்தது ஆம்ஸ்ட்ராங் தான். நிலவில் முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் ஆல்ட்ரின் தான்.
புகைப்படக்கருவி
1990 ஆம் ஆண்டு ஹப்பிள் (The Hubble Space Telescope) எனப்படும் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்தது நாசா. ஆனால் புகைப்படங்கள் எதிர்பார்த்த அளவு துல்லியமாக இல்லை. காரணம் அதில் பொருத்தப்பட்டிருந்த முதன்மைக் கண்ணாடி தான். இது மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சரிசெய்யப்பட்டது. அதன்பின்பு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் ஹப்பிளை விட பன்மடங்கு துல்லிய புகைப்படத்தினை எடுக்கும் ஜேம்ஸ் வெப் (James Webb) எனப்படும் கேமராவை நாசா கண்டுபிடித்திருக்கிறது. 2021 வாக்கில் இது விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிகிறது.
புகைப்படங்கள்
நிலவில் பதிந்திருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் காலடி. அங்கு காற்று, மழை இல்லையென்பதால் இந்த காலடித்தடம் இன்றுவரை அப்படியே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
நாசாவின் முதல் நிலவுப்பயணத்தின் போது நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த புகைப்படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வியாழன் கோளின் நிலவை நாசாவின் கேசினி விண்கலம் எடுத்த புகைப்படம்.
1969 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட Apollo 9 விண்கலத்தில் இருந்த டேவ் ஸ்காட் (Dave Scott) என்னும் ஆராய்ச்சியாளர் பூமியைப் பார்க்கும் போது எடுத்த புகைப்படம்.
நாசாவின் கியூரியாசிடி விண்கலத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ரோபோ ஒன்று அதன் பரப்பை ஆய்வு செய்யும் படம்
அப்போல்லோ 17 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். இதனை அனைவரும் “ப்ளூ மார்பிள்” (Blue Marble) என்று அழைக்கின்றனர்.
1965 ஆம் ஆண்டு நாசாவால் மேற்கொள்ளப்பட்ட முதல் விண்வெளி நடைப்பயணத்தின் போது எடுத்த புகைப்படம் தான் கீழே இருப்பது. Gemini 4 என்ற விண்வெளி ஓடத்தில் பயணித்த ஆராய்ச்சியாலர்களுள் ஒருவரான எட் வைட் (Ed White) தான் போட்டாவில் இருப்பவர். இதனை படம்பிடித்தவர் ஜிம் மெக்டிவிட். (Jim McDivitt)