இதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்தால், இந்த வண்ணத்துப்பூச்சிக்கு வாடகை கொடுக்கப்பட்டதா? என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். இந்த திருமண புகைப்படங்களை எடுத்தவர் Laurenda Marie. இதற்கு முன்பு கூட இவரின் புகைப்படங்கள் வைரலானது. அதில் ஒரு மான், தம்பதியுடன் புகைப்படங்களில் இடம் பெற்றிருந்தது. அதேபோல் தற்போது மோனார்க் வண்ணத்துப்பூச்சி, இந்த திருமணத்தில் அடம் பிடித்து புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளது.

அழகு சேர்ந்த மோனார்க் வண்ணத்துப்பூச்சி

“ப்ரூக் மற்றும் ட்ரூவின் திருமணம் என்ன அழகு!” என்று ஆச்சரியப்படும் வகையில் Laurenda Marie தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை குறிப்பிட்டு, ப்ரூக்கின் மறைந்த பாட்டி தான் வண்ணத்துப்பூச்சி வடிவில் வந்துள்ளதாக Laurenda Marie குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ப்ரூக் மற்றும் ட்ரூவின் நிச்சயதார்த்ததின் சில நாட்களுக்கு முன்பு தான் அவரது பாட்டி இறந்துள்ளார்.
பாட்டிக்கு மோனார்க் வண்ணத்துப்பூச்சி மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது. எனவே அவர், வண்ணத்துப்பூச்சியாக வந்ததாக குறிப்பிட்டு ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார் Laurenda Marie.

இந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் 14 2020 அன்று எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கொரோனா ஊரடங்குக்கு பின் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு என்று Laurenda Marie பகிர்ந்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் ப்ரூக் மற்றும் ட்ரூவின் நிச்சயதார்த்ததில் அதிகமான ஆட்கள் அழைக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு மோனார்க் வண்ணத்துப்பூச்சி ஒரு சிறந்த விருந்தாளி தான்.

இந்த வண்ணத்துப்பூச்சி அடம்பிடித்தப்படி மணமகன் மற்றும் மணமகள் கால், கைகளில் புகைப்படத்திற்கு ஏற்றார் போல் இருந்து போஸ் கொடுப்பதை நீங்கள் பார்க்கலாம்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த வண்ணத்துப்பூச்சி அவர்கள் இருந்த இடத்தை சுற்றி வந்துள்ளது. ஒரு வண்ணத்துப்பூச்சியால் வைரலானது இந்த திருமண புகைப்படபதிவு!