நாம் விதவிதமான படகுகளை பார்த்திருப்போம். ஒவ்வொரு படகுகளும் ஒருவித புதிய அனுபவம் தரும். அதில், லாசரின் டிசைன் (Lazzarini Design Studio) நிறுவனம் வடிவமைத்துள்ள படகு ஒன்று சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 450 அடி நீளமுள்ள இந்த படகு ஒரு புதுமையான வடிவமைப்பாகும்.

இதில் ஹெலிபேடுகள், மற்றொரு பக்கம் கேரேஜ் வரை புதிய அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய படகு தலைபோல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த படகை கீழே இறக்கி வழங்கும் தலை போன்ற அமைப்பும் உள்ளது.

இது முற்றிலும் எலக்ட்ரிக் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குளம், பயணிகள் அமரும் இடம் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளது.

இதில், ஒரே நேரத்தில் 60 பேர் பயணிக்க முடியும். இது இன்னும் உருவாக்கப்படவில்லை. முதலீட்டாளர்களால் இதை நிச்சயம் உருவாக்கலாம் என்று லாசரின் டிசைன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

முழுவதும் வடிவமைக்க இந்திய மதிப்பில் 36 ஆயிரம் கோடி செலவாகும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் மேலும் பல படங்கள் இங்கே…





இதை தயாரிக்க 360000 கோடி ரூபாய் செலவாகும் என இந்நிறுவனம் கூறியுள்ளது.
All Photo from Lazzarini Design Studio