செப்டம்பர் 16, 2019 அன்று வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் போயிங் நிறுவனத்தின் இடத்துக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை காட்டும் அற்புதமான வான்வழி புகைப்படம். REUTERS / Lindsey Wasson
2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு ‘Reuters’ தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும் இந்த 20 அருமையான படங்களின் காணலாம்.
தென் பசிபிக் பெருங்கடலின், சிலி கடற்கரையில் உள்ள ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகளைச் சுற்றி காற்று திசை திரும்புவதால் மேகங்களின் சுழல்களால் இதயம் போன்ற வடிவம் உருவாகும் காட்சி. February 2, 2019. NASA EOSDIS/LANCE and GIBS/Worldview/Handout via REUTERSரஸ்யாவின் யெனீசி ஆற்றங்கரையில் உள்ள சைபீரியன் டைகா காட்டின் பனி படர்ந்த மற்றும் கரடுமுரடான மலைப்பாதையில் பயணிக்கும் ரயில். February 11, 2019. REUTERS/Ilya Naymushinகுளிர்காலத்தில் ரஸ்யாவின் Krasnoyarsk பகுதியில், பனி மூடிய யெனீசி ஆற்றின் கரையை அடைய ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையில் பயணிக்கும் கார். சாலையிலும் பனி படர்ந்துள்ள காட்சி. March 3, 2019. REUTERS/Ilya Naymushinஇடாய் சூறாவளிக்குப் பின்னர், மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா நகருக்கு அருகே இருக்கும் தட்டையான பயிர்கள். March 24, 2019. REUTERS/Mike Hutchings நெதர்லாந்தின் கிரெயில் நகருக்கு அருகிலுள்ள டுலிப் மலர் வயல்களின் வான்வெளி பதிவு. April 18, 2019. REUTERS/Yves Hermanகிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெம்பாவுக்கு வடக்கே ஒரு கிராமத்தில், கென்னத் சூறாவளியின் போது சேதமடைந்த கட்டிடங்கள். May 1, 2019. REUTERS/Mikeலிபியாவின் கடற்கரையில் மீட்பு குழுவினரின் கப்பலை நோக்கி நீந்தும் புலம்பெயர்ந்தவர். May 11, 2019. Sea-Watch.org/Handout via REUTERSசீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஜியான் பகுதியில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் காட்சி. June 12, 2019. REUTERS/Stringerபிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள குவாருஜாவில் உள்ள ஒரு கடற்கரையில் ஒரு பெண் தனது சைக்கிளை நோக்கி ஓடுகிறார். June 18, 2019, REUTERS/Nacho Doceகிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் காட்சி. June 20, 2019. REUTERS/Alkis Konstantinidisவடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குரில் தீவுகளுக்கு மேலே, ரெய்கோக் எரிமலையிலிருந்து எதிர்பாராத தொடர்ச்சியான வெடிப்புகளுக்குப் பிறகு, ஒரு பெரிய எரிமலை சாம்பல் மற்றும் வாயுத் தட்டு உயரும் காட்சி, இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது. June 22, 2019. NASA/Expedition 59 Crew/Handout via REUTERSபிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதிவெப்பமடைந்து வருவதால் பாரிஸில் உள்ள ஆண்ட்ரே சிட்ரோயன் பூங்காவில் ஒருவர் ஓய்வெடுக்கும் காட்சி. June 25, 2019, REUTERS/Charles Platiauஜெர்மனியின் டிராவெமுண்டேயில் உள்ள பால்டிக் கடலின் கரையில் மக்கள் சூரிய ஒளியை அனுபவிக்கிறார்கள் (Sunbathing). June 30, 2019 REUTERS / Fabian Bimmerஇந்தோனேசியாவின் மரோஜாம்பியில் உள்ள கம்பே உலு மாவட்டத்தில் ஒரு எண்ணெய் பனை (Palm Oil) தோட்டத்திற்கு அடுத்ததாக காட்டுத் தீ பற்றிய வான்வழி காட்சி. July 30, 2019. Antara Foto/Wahdi Septiawan via REUTERSபிரேசிலின் போர்டோ வெல்ஹோ அருகே மரம் வெட்டிகள் மற்றும் விவசாயிகளால் அமேசான் காட்டில் ஒரு பகுதி எரிகிறது. August 29, 2019. REUTERS / Ricardo Moraesகனடாவின் Dewey Soper பறவைகள் சரணாலயத்தின் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் ஒரு பகுதி. September 14, 2019. NASA/Handout via REUTERSசெப்டம்பர் 16, 2019 அன்று வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் போயிங் நிறுவனத்தின் இடத்துக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை காட்டும் அற்புதமான வான்வழி புகைப்படம். REUTERS / Lindsey Wassonபிரேசிலின் ரொண்டோனியா மாநிலத்தின் போர்டோ வெல்ஹோ அருகே அழிக்கப்பட்ட அமேசான் காட்டில் எஞ்சியிருந்த ஒற்றை மரம். September 17, 2019, REUTERS/Bruno Kellyஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள ஒம்ஸ்க் (Omsk) நகரத்தில் காலை நேரத்தில் உள்ள மூடுபனி. October 8, 2019. REUTERS / Alexey Malgavkoசீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் லிஜியாங் பகுதியில் சாப்ஸ்டிக்ஸ் (சீனர்கள் சாப்பிட பயன்படுத்தும் குச்சி) தயாரிக்க மூங்கில்களை உலர்த்தும் கிராமவாசிகள். October 11, 2019, REUTERS/Stringer
NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.
காதலர் தினத்திற்கு உங்கள் காதலருக்கு வாங்கி தர அருமையான பரிசுப்பொருட்கள் இதோ உங்களுக்காக... Couple Rings for Lovers Traditional Ethnic Pearls Jhumka Earrings for Women Valentine Love Heart Shaped Crystal...