யுவன் ஷங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருப்பினும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கென்று ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. அவர்கள் பலருக்கும் யுவன் ஏதோ ஒரு கணத்தில் ஸ்பெஷல் என அவர்கள் கூறுவதை YouTube கமெண்ட் பகுதியில் கண்டு புரிந்துகொள்ளலாம்.
ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் மன்றம் வைத்து கொண்டாடி தீர்க்கின்றனர். இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நியோதமிழ் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டு அவரது சிறந்த 10 தீம் இசையை இங்கே பட்டியலிடுகிறோம்.
மங்காத்தா
அஜித் படங்களுக்கு யுவனின் மாஸ் இசை தீனா படத்தில் தொடங்கியது. இன்று வரை வெளியான தமிழ் சினிமாக்களில் கதாநாயகனுக்கான மாஸ் பிஜிஎம் என்றாலே பலரும் கூறுவது மங்காத்தா படத்தின் இந்த தீம் இசையைத்தான். இந்த தீம் கிளப்பி விடும் எனர்ஜியால் சினிமா ரசிகர்கள் இன்று வரை திக்கு முக்காடிக் கொண்டுள்ளனர். அஜித் ரசிகர்கள் பெரும்பாலோனோருக்கு சிறந்த தீம் இது தான்.
பில்லா
படம் வெளிவந்தது 2007 ம் வருடம். இப்போது கேட்டாலும் நம் மனம் காட்சியையும், அதன் பிரமாண்டத்தையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடும். அதிரடி தீம் என்றால் இது தான் என்று பலரும் கூறுவது தான் இதன் தனிச்சிறப்பே. அஜித் ரசிகர்களை தாண்டி அனைத்து மாஸ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது இந்த தீம்.
புதுப்பேட்டை
யுவன் ஏகப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களிடம் சென்று சேர்ந்தது துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் போன்ற படங்களின் மூலமாக.. யுவன் -செல்வராகவன் காம்போ இன்று வரை தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. புதுப்பேட்டையில் வரும் இந்த பின்னணி இசையும், அதைத் தொடர்ந்த ‘வர்ரியா…’ பாடலும் தரை லோக்கலாக எனர்ஜியை வாரி வழங்கி எழுந்து ஆட வைக்கும். படம் வெளியான போது ரசிகர்களின் கொண்டாட்டத்தில் திரையரங்கமே அதிர்ந்தது.
பில்லா 2
2007 ல் வெளிவந்த பில்லா படத்தின் அதே பின்னணி இசையை, மெருகேற்றி 2012- ல் மேலும் பலரை புருவம் உயர வைத்தது இந்த பிஜிஎம். அதிரடி இசையை மறக்காமல் இங்கே கேளுங்கள்.
7G ரெயின்போ காலனி
இந்த இசைக்குள் நிச்சயம் ஜீவன் ஒளிந்து கொண்டுள்ளது. அந்த காலத்தில் திரையரங்கில் ட்ரைலராக வெளிவந்த போதே இந்த தீம் இசை ஹிட். தமிழில் சிறந்த 10 காதல் படமாக இது நிற்க இசை முக்கிய காரணம். இந்த படத்தின் பாடல்கள் யுவனுக்கு மேலும் பல மில்லியன் ரசிகர்களை பெற்று தந்தது. ஹெட்செட் மாட்டி கேட்டால் கண்ணில் இருந்து நீர் வரும். கூடவே கல்லூரி கால நினைவுகளும்…
மௌனம் பேசியதே
‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் வரும் ‘இரவா பகலா’ பாடலை பலரும் காதலின் வலி மிகுந்த நினைவுகளுடன் கடந்து வந்திருப்பீர்கள்… அமீர் கூட்டணியில் 2002 ல் வெளிவந்த இப்படத்தின் தீம் மியூசிக் காதலிக்க நினைத்தோரின், காதலித்தோரின் ஆல் டைம் ஃபேவரிட்.
சண்டக்கோழி
இயக்குனர் லிங்குசாமியுடன் முதன் முதலில் கைகோர்த்த படம் இது. பாடல்கள் ஹிட். ஹீரோ தொடர்பான பல காட்சிகளில் வரும் இந்த பின்னணி இசை. படத்தின் இறுதியில் வரும் அரிவாள் சண்டை முடியும் தருவாயில் மீண்டும் தொடங்கும் இந்த இசை இன்றும் ஸ்பெஷல் தான்.
மன்மதன் & வல்லவன்
சிம்புவுடன் யுவன் கைகோர்த்த பல படங்கள் இசை வடிவில் பெரும் ஹிட். மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம் போன்ற படங்களின் பாடல்கள் ஹிட் ரகம். மன்மதன், வல்லவன் படங்களின் சிறு சிறு பின்னணி இசைத் துணுக்குகளும் கூட சிம்பு ரசிகர்களுக்கு விருப்பமானவை.
காதல் கொண்டேன்
அன்றைய கல்லூரி மாணவர்களின் ஃபேவரிட் படம் இது. இன்று வரை அவர்களின் ஃபேவரிட் படமாக இது இருக்க இசை முக்கிய காரணம். இசையை கேட்டவுடன் ஆட்டம் போடும் தனுஷ் கண்முன்னே வந்து போவார். கூடவே பரபரக்கும் காட்சிகளும்…
நந்தா
‘நந்தா’ படத்தின் ‘முன்பனியா’ பாடலின் முதல் இசையுடன் தொடங்கும் இந்த தீம் மனதை வருடி விடும் என்பது நிச்சயம்.
இவை தான் சிறந்த தீம் என்று கூற முடியாத படி மேலும் பல யுவனின் படங்கள் உள்ளன. துள்ளுவதோ இளமை, வானம், கழுகு, பருத்தி வீரன், யாரடி நீ மோகினி, தீராத விளையாட்டு பிள்ளை, கற்றது தமிழ், ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், சென்னை 600028, கோவா, சிவா மனசுல சக்தி, ராம், தரமணி, தீபாவளி, சரோஜா, சர்வம், பையா, பியார் பிரேமா காதல் போன்ற படங்களும் சிறந்த பின்னணி இசையுடன் தான் வந்தன. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு அடுத்து பிஜிஎம் கிங் என்றால் அது யுவன் தான். நமக்கு இளைப்பாறல் தரும் இசையை படைக்கும் யுவன் மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!