தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனரான மணிரத்னம் தயாரிக்க இருக்கும் வானம் கொட்டட்டும் என்னும் படத்திற்கான இசையமைப்பாளராக சித் ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மணிரத்னம் கூட்டணியில் சுமார் முப்பது வருடம் கழித்து ரகுமான் அல்லாத வேறு ஒருவர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருப்பது தமிழ் சினிமா உலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சித் ஸ்ரீராம்
மணிரத்னத்தின் கடல் பட பாடல்கள் வெளிவந்திருந்த நேரம். ஷக்தி ஸ்ரீ கோபாலனின் நெஞ்சுக்குள்ள பாடல் தமிழக மக்களை கிறங்கடித்தாலும், அது யார் அந்த புதுப்பயன் என எல்லோரும் பேசியது அடியே பாடலைப் பற்றித்தான். அமெரிக்காவில் இருந்து யாரோ புது பையன் பாடிருக்கான் என்ற பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் துரிதமாகவே தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றார் சித் ஸ்ரீராம். அடுத்தடுத்த பாடல்கள் அவருக்கான இமேஜை தட்டித் தூக்கியது. கேட்கும்போதே கரைத்து விடும் ஒரு குரல். எஸ்.பி.பி, ஹரிஹரன், ஜேசுதாஸ் ஆகியோரின் இடத்தை நிரப்ப வந்த குரல். மறுவார்த்தை பேசாதேவிற்குப் பிறகு தமிழகத்தின் அசைக்க முடியாத இடத்தை மக்கள் ஸ்ரீராமுக்கு கொடுத்தனர். திரைப்பாடல்கள் தவிர இசைக்கச்சேரிகளிலும் ரசிகர்களை நெக்குருக வைப்பதால் அவருக்கென தனி டிரேட் தமிழகத்தில் உருவானது.
பாடல் எழுதவும், இசையமைக்கவும் முறைப்படி கற்றிருக்கும் ஸ்ரீராமை பின்னணி பாடகராக மட்டுமே தமிழ் திரையுலகம் பார்த்துவந்தது. அவரை இசையமைப்பாளராக மாற்றியிருக்கிறார் மணிரத்னம். படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கம் வானம் கொட்டட்டும் என்னும் படம் மூலமாக இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் சித் ஸ்ரீராம்.

கடைசி நேர திருப்பம்
96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் முதலில் வானம் கொட்டட்டும் படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேறு படங்களில் கோவிந்த் பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்பு சித் ஸ்ரீராமிற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் கதை – வசனம் ஆகியவற்றில் தனாவுடன் மணிரத்னமும் ஈடுபட்டிருப்பதால் நிச்சயம் மணிரத்னத்தின் “டச்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலை இயக்குனராக அமரனும், ஒளிப்பதிவாளராக ப்ரீத்தாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.