இசைஞானி இளையராஜா பற்றி பலரும் அறியாத 25 சுவாரசிய தகவல்கள்

Date:

கர்நாடக சங்கீதத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை கரம் பிடித்து செம்மண்ணிற்கு இழுத்து வந்தவர் இளையராஜா. கிராமப்புற பாடல்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்களுள் மிக முக்கிய அங்கம் வகிக்கும் இசைஞானியின் சாதனைகளை பலரும் தெரிந்துகொள்ளும் விதமாக அவரைப்பற்றி சுவாரசிய 25 தகவல்கள் இங்கே… 

ilayaraja-t-nagar-chennai-music-directors-43gll1f
 

இசையின் ராஜா

பழைய இசையின் தழுவல்கள் வந்த காலம் போய் பழைய இசையை அப்படியே புதுப்பிக்கும்(Remix) இதே காலத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இசை மடையைத் திறந்துவிட்டவர் இளையராஜா.

  1. கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார மேடைகளில் பாடும் தனது அண்ணன் பாவலருடன் தனது இசைப் பயணத்தைத் துவங்கினார் இளையராஜா. துவக்கத்தில் பெண்குரலில் தான் பாடியிருக்கிறார்.
  2. அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் தன் தாய்க்காக கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார் இளையராஜா. அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.
  3. யாருக்காகவும் சிபாரிசு செய்யாத, ஏற்றுக்கொள்ளாத இளையராஜா சங்கிலி முருகனுக்கு சிபாரிசின் பெயரில் வாய்ப்பளித்தார். ஏனெனில் சிபாரிசு செய்திருந்தது இளையராஜாவின் தாயார் சின்னத்தாய்.
  4. வறுமையின் தீரா அன்பில் இருந்த இளையராஜா கோவையில் 85 ரூபாய் விலைகொடுத்து, தான் வாங்கிய ஆர்மோனியத்தைத்தான் இன்றும் வைத்திருக்கறார். பல மேடைகளில் அவரே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
  5. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 56 படங்களுக்கு இசையமைத்த சாதனை இளையராஜாவையே சேரும்.
  6. இதுவரை சுமார் 6000 பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையை வடிவமைத்திருக்கிறார். ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களுக்கு ஹங்கேரி குழுவினை வைத்தே மொத்த இசையும் பதிவு செய்யப்பட்டது.
  7. இசைக்கு இளையராஜா கொடுத்த முக்கியத்துவம் தான் இத்தனை புகழுக்கும் பின்னால் பிரம்மாண்டமாக நிற்கிறது.  இளையராஜா ‘காதலின் தீபம் ஒன்று‘ பாடலுக்கான மெட்டை விசில் அடித்து அதைப்பதிவு செய்து குழுவினருக்கு அனுப்பிவைத்தார். மேலும் ஒரே நாளில் 20 பாடல்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு இசையின் மீது தீராக்காதல் கொண்டவர் இளையராஜா.
  8. உலகப் புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் க்ளாசிகல் கிதார் பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கியவர் ராஜா சார்.
  9. சிம்பொனி இசையை உருவாக்க சராசரியாக ஆறு மாத காலம் ஆகும். ஆனால் இளையராஜா 13  நாட்களில் உருவாக்கி உலக இசை மேதைகளை வியப்பில் ஆழ்த்தினார். மேலும் ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனியை இசைத்தவரும் இவரே.
  10. வெயில் காலத்தின் நாள் ஒன்றில் மழைபெய்ய வைக்கும் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து மழையை கொண்டுவந்த நாளில் இளையராஜா சாதாரண இசையமைப்பாளர் இல்லை என அவரது எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அப்படி உருவான பாடல்தான் அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள தூங்காத விழிகள் ரெண்டு.
  11. இசை உலகில் மிகவும் சிக்கலான கவுன்டர் பாய்ன்ட் நுட்பத்தை சிட்டுக்குருவி என்னும் படத்தில் வரும் என் கண்மணி உன் காதலன் பாடலில் புகுத்தினார் இளையராஜா.
  12. ஹேராம் படத்திற்கு இன்னொருவர் போட்டிருந்த இசையை அப்படியே நீக்கிவிட்டு வாய் அசைவுகளுக்கு ஏற்றபடி புது இசையினை அமைத்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்தவர் இளையராஜா.
  13. கர்நாடக சங்கீதத்தில் கடினமான ரீதி கெளளை என்னும் ராகத்தை கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடலில் அறிமுகப்படுத்தினார். இசை உலகின் ஜாம்பவானான பால முரளி கிருஷ்ணா அந்த ராகத்தை முதலில் கேட்டவுடன் பிரம்மித்துப் போனதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
  14. இந்தியாவில் முதன்முறை எலெக்ட்ரிக் கிதாரை அறிமுகப்படுத்தியது ராகதேவன் தான். படம் காயத்ரி. ஆண்டு 1977. ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி நடித்திருந்தனர்.
  15. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்றிருந்த ஆட்டுக்குட்டி முட்டையிட்டு  பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்துள்ளதாகும். இளையராஜா அந்த ராகத்தில் அமைத்த முதல் மற்றும் கடைசிப் பாடலும் அதுதான்.
  16. பின்னணி இசைக்காக தேசியவிருது வாங்கிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா தான்.
  17. செவ்வியல் ராகமான பஞ்சமுகியை உருவாக்கி இசை உலக ஜாம்பவான்களை திகைப்பில் ஆழ்த்தினார் இளையராஜா.
  18. தமிழ் திரைப்படத்துறையில் மிக முக்கிய இயக்குனரான மணிரத்னத்தின் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்கம்மா கையத்தட்டு 75 ஆண்டுகளில் அதிகமுறை அதிக மக்களால் கேட்கப்பட்ட பாடல் என பி.பிசி. செய்தி நிறுவனம் அறிவித்தது. மேலும் இதே படத்தில் உள்ள சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் 134 இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  19. நூறாவது நாள் திரைப்படத்தின் ரீரெக்கார்டிங்கிற்கு இளையராஜா எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 12 மணிநேரம் தான்.
  20. இளையராஜா பின்னணி இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது சிறைச்சாலை படத்திற்குத்தான். எத்தனை நாட்கள் தெரியுமா? 24 நாட்கள்.
  21. இளையராஜா இதுவரை 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.
  22. இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு அளிக்கப்பட்டது.
  23. 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
  24. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1994 ஆம் ஆண்டிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1996 ஆண்டும் இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் அளித்து கவுரவப்படுத்தியது.
  25. இளையராஜாவின் ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை ஆகும். அந்தப்படத்திகு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார் இளையராஜா.
maestro ilayaraja

இசையில் சின்ன அபஸ்வரம் வந்தாலும் அதைவிடாமல் திருத்திய பின்னரே சமாதானமடைவார். தன் கலையுலக வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பல கலை நிகழ்ச்சிகளில் கொஞ்சம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறார் இசைராஜா. ஏனெனில் கலைநிகழ்ச்சியை காண வருபவர்களிடம் இசை தான் பேச வேண்டும் என்பார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!