Homeகலை & பொழுதுபோக்குஇசை: மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த 10 பாடல்கள்!

[பாடல்கள்]: மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த 10 பாடல்கள்!

NeoTamil on Google News

மலேசியா வாசுதேவன் ஒரு பன்முகக்கலைஞர். திரையிசைப்பாடல்கள் பலவற்றை பாடியுள்ள இவர், சிறந்த குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் புகழ் பெற்றவர். 15 ஜூன் 1944 -ல் பிறந்த மலேசியா வாசுதேவன் 30 ஆண்டுகளுக்கும் மேலான திரைவாழ்வில் 8000 க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை பாடியுள்ளார். அவர் 4000 பிற மொழி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். அவரது சிறந்த 10 பாடல்களாக நாங்கள் நினைக்கும் பாடல்கள் இவை தான்…

1
பொதுவாக என் மனசு தங்கம்

1980-ல் ரஜினியை கிராமத்து மக்களை நோக்கி எடுத்துச் சென்று அவருக்கு பேர் வாங்கி தந்த இப்பாடல் ஹீரோக்களுக்கான சிறந்த அறிமுகப் பாடல். இதை ரஜினியே சமீபத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். இதை துள்ளலுடன் பாடியவர் மலேசியா வாசுதேவன் அவர்கள்!

2
கோடை கால காற்றே…

என்ன ஒரு மெலடி…இன்று கேட்டால் பலருக்கும் தங்களது இலங்கை வானொலியில் கேட்ட பள்ளிப்பருவத்தை கண்முன் கொண்டு வரும் பாடல் இது. கோடை காலத்தில் காற்றையே மனதை மயக்கும் தென்றல் காற்றாக தருவிக்கும் பாடல் இது. இப்படிப்பட்ட மெலடி மலேசியா வாசுதேவனின் குரலுக்கு பொருந்தும் என்று எப்படித்தான் அறிந்தாரோ இசைஞானி இளையராஜா. அதனால் தான் அவர் இசைஞானி.

3
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…

மலேசியா வாசுதேவனிடம் இந்த பாடலை பாடத்தெரியாத கிராமத்து மனிதன் பாடும் வகையில் இருக்கவேண்டும் என்று இளையராஜா கேட்டுக்கொண்டாராம். ஆனால், மலேசியா வாசுதேவனோ தனக்கு பாடத்தெரியவில்லை என்று பிறர் நினைத்துவிடுவார்களே என பயந்து நன்றாக பாடிவிட்டாராம். மலேசியா வாசுதேவனின் ஆரம்ப காலகட்டம் அது. இதை இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

4
ஆசை நூறு வகை…

அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்ற பார்ட்டி பாடல் ‘ஆசை நூறு வகை’. 2003 -ல் யுவன் சங்கர் ராஜா இசையில் ரீமிக்ஸாகவும் வந்து ஹிட்டடித்த பாடல் இது. பேஸ் கிட்டாரில் கலக்கலான இசையில் அமைந்துள்ள பாடலில் தனித்துவமான குரலில் ரசித்துப்பாடியிருப்பது மலேசியா வாசுதேவன்.

5
பூங்காற்று திரும்புமா…

இந்த பாடலில் சிவாஜிக்கு பொருத்தமான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் மாறிப்போனது ஆச்சரியம். ‘கேட்டேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் சாகும்வரை. வானொலியில் கேட்டேன், இசத்தட்டில் கேட்டேன், டேப்ரெக்கார்டரில் கேட்டேன் சிடி பிளேயரில் கேட்டேன், ஐபேடில் கேட்டேன், புளுரேவில் கேட்டேன் இன்னும் எத்தனை டெக்கனாலஜி வந்தாலும் பாடல் மட்டும் மாறாது’ என்கிறது YouTube தளத்தில் ஒரு பின்னூட்டம்.

6
ஒரு தங்க ரதத்தில்…

அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் இப்பாடலை மலேசியா வாசுதேவனின் குரலில் கேட்கும் போது உள்ளம் உருகிப்போகும். கண்ணதாசனின் வரிகளில் இளையராஜாவின் இசையில் 1979-ல் வெளிவந்த இந்த பாடல் பல அண்ணன் -தங்கைக்கும் இன்றும் ஃபேவரைட்.

7
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு…

இளையராஜா இசையில் கண்ணதாசனின் வரிகளில் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் சற்று வித்தியாசமாக வெளிப்பட்டிருக்கும். சிறந்த மெலடியை சிறப்பான முறையில் பாடியிருப்பார்.

8
வெத்தலைய போட்டேண்டி…

ரஜினியின் ஸ்டைலுக்கு பெயர் வாங்கி தந்த பில்லா படத்தில் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் போதை ஏறியவர்கள், ஏறியதாக நடிப்பவர்கள் இன்றும் முணுமுணுக்கும் பாடல் இது. ‘நிக்குறனா பறக்குறனா எதுவுமே தெரியலடி’ என்று மலேசியா வாசுதேவன் பாடியது.

https://www.youtube.com/watch?v=XTAe19be26c

ரஜினி காந்த் நடித்த பில்லா திரைப்பட விமர்சனம்

9
பூவே இளைய பூவே…

காலம் கடந்து நிற்கும் இந்த பாடலில் மலேசியா வாசுதேவன் பாடிய விதம் அற்புதம். சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த படத்தில் இடம்பெற்று பெரும் ஹிட்டடித்த தெலுங்கு பாடல் ஒன்று இந்த பாடலை ஒத்திருந்தது. அந்த வீடீயோவை இங்கே பார்க்கலாம்.

10
பொன்மானை தேடி நானும்…

கங்கை அமரன் இசையில் வெளிவந்த சிறந்த 5 பாடல்களில் நிச்சயம் இந்த பாடல் இருக்கும். கிராமங்களில் இன்றும் பலராலும் இந்த பாடல் கேட்கப்பட்டு வருகிறது. டவுன் பஸ்களில் இன்றும் கூட காதல் சோகத்தை வெளிப்படுத்தி வரும் பாடல் இது என்பதும் கூடுதல் தகவல். மலேசியா வாசுதேவன் கிராமத்து ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணம் இப்பாடல்.

அதிசய பிறவி படத்தில் அனைத்து பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். 8000 பாடல்களில் எந்த பாடலை இந்த பட்டியலில் சேர்ப்பது என்றும், விடுவது என்றும் தெரியாததால் மேலும் சில போனஸ் பாடல்கள் இங்கே…

11
ஒரு கூட்டு கிளியாக…

12
வெட்டிவேரு வாசம்…

13
மலையோரம் மயிலே…

https://www.youtube.com/watch?v=UN0TT6JjG-8

14
ஆகாய கங்கை…

15
காதல் வைபோகமே…

இது போல் மேலும் பல பாடல்களை amazon prime music -ல் கேட்டு மகிழலாம்.

உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை இங்கே கமெண்ட் செய்யுங்கள்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

- Advertisment -

Must Read

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

0
வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. வான்கோழி பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! இதோ... காட்டு வான்கோழிகளால் பறக்க முடியுமா? காட்டு...
error: Content is DMCA copyright protected!