2019 -ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய படங்களின் பட்டியல்!!

Date:

ஆஸ்கார் வரலாற்றில் இரண்டாவது முறையாக தொகுப்பாளர் இல்லாமலும், விழா நடைபெறும் நேரத்தைக் குறைக்க இடைவேளையில் விருது வழங்கப்படுவதற்கும் எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்றது 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா.

oscar
Credit: Medium

1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடமே தொகுப்பாளர் இல்லாது “ஆஸ்கார் விருது வழங்கும் விழா” நடைபெற்றது.  2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த காமெடி நடிகர் கெவின் ஹர்ட் (Kevin hurt) ட்விட்டரில் பதிவேற்றிய ஓரினச்சேர்க்கை பற்றிய கருத்துக்கு, அவர் மன்னிப்பு கேட்காவிடில்  இந்த விழாவை தொகுத்து வழங்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த கருத்துக்குப் பிறகு, தாம் ஓரினச்சேர்க்கை பற்றி அதிகம் புரிந்து கொண்டு தற்போது பக்குவம் அடைந்து விட்டதாகவும் அந்த கருத்துக்கும் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனக்கூறிய கெவின், விழா தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனாலும் வரலாற்றில் இரண்டாவது முறையாக தொகுப்பாளர் இல்லாமலும் விழா படுஜோராக நடைபெற்றது.

“Outstanding popular film” என்ற புது தலைப்பில் ஆஸ்கார் விருது வழங்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டிருந்தாலும் ஆஸ்கார் உறுப்பினர் களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அந்த விருது அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டால்பி தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அதிகபட்சமாக “Bohemain Rhapsody” திரைப்படம் 4 விருதுகளை அள்ளிச்சென்றது.

சிறந்த டாக்குமெண்டரி படம்

நேஷனல் ஜியோகிராப்பி தயாரித்த “free zolo “ படம் சிறந்த டாக்குமெண்டரி படமாக தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மலையேறும் வீரர் Alex honnold , கலிபோர்னியாவில் உள்ள 3000 அடி உயரம் கொண்ட யோஸோமிட்( yosomite)  சுவரை எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமலும் ஏறும் உண்மையான முயற்சியை காட்டும் படம் இதுவாகும்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

Spiderman home coming படத்தின் ஒரு சீரியஸாகவும் அனிமேஷன் முறையிலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த Spiderman into the spider- verse படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

oscars25_February_19
Credit: NDTV Khabar

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது Domee Shi இயக்கிய “Bao” படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த குறும்படம்

2018 ஆம் ஆண்டின் சிறந்த குறும்படத்திற்கான விருதை  ஈரானிய – அமெரிக்க பெண் இயக்குநர் Rakya zehtabchi அவர்கள் இயக்கிய “ Period end of sentence” குறும்படம் தட்டிச் சென்றது. இந்தியாவில் மாதிவிடாய் சமயத்தில் பெண்கள் படும் இன்னல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது.

சிறந்த லைவ்- ஆக்ஷன் படம்

சிறந்த லைவ் ஆக்ஷன் திரைப்படமாக இஸ்ரேலிய இயக்குநர் Guy nattiv  இயக்கிய “Skin” திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

Bohemian rhapsody

சிறந்த நடிகர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை , சிறந்த படத்தொகுப்பு என நான்கு பிரிவுகளில் இந்தப் படம் வெற்றிபெற்றது.

Roma

2018 ஆம் ஆண்டு வெளிவந்த “ Roma”  திரைப்படத்தை இயக்கிய Alfonso cuaron அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. 1970 களில் மெக்சிகோவை சேர்ந்த மக்கள் அமெரிக்கர்களால் எவ்வாறு அடிமைகளாகவும் வேலையாட்களாகவும் நடத்தப்பட்டனர் என்பதை பற்றி  “கருப்பு – வெள்ளை” நிழலாக இப்படம் நினைவூட்டுகிறது.

ஆங்கிலம் அல்லாது வேறு மொழித் திரைப்படம் என்ற பிரிவிலும் இப்படம் விருதைப் தட்டிச் சென்றது. சிறந்த ஒளிப்பதிவிற்காகவும் Alphonso cuaron அவர்களுக்கே ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

Green book

சிறந்த திரைக்கதையாக (spike Lee) மற்றும் 2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது “Green book” படத்திற்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் நடித்த mahershala Ali  க்கு சிறந்த நடிகருக்கான விருது  வழங்கப்பட்டது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்

சிறந்த விஷூவல் எஃபெக்ட் டிற்க்கான விருது ” first man “ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படத் தயாரிப்பு மற்றும் உடையலங்காரத்திற்க்கான விருது

சிறந்த   புரொடக்சன்ஸ் டிசைன் பிரிவில் உலகளவில் வசூல் சாதனை புரிந்த “Black panther” படத்திற்கு விருது வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த உடையலங்காரம் பிரிவிலும் பிளாக் பாந்தரே பாய்ந்து பரிசைப் பெற்றது.

Oscar-Nominations-2019
Credit: The Wrap

சிறந்த பாடல்

சிறந்த திரைப்படப் பாடலுக்கான ஆஸ்கார் விருது “A star is Born” படத்தில் இடம்பெற்ற “shallow “ என்ற பாடலுக்கு வழங்கப்பட்டது. இதைப் பாடிய புகழ்பெற்ற பாப் சிங்கர் “லேடி காகா” இவ்விருதைப் பெற்றார். இதுவே இவருக்கு முதல் திரைப்பட அறிமுகமாகும்.

சிறந்த நடிகர்  மற்றும் நடிகைக்கான விருது

2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக “Bohemian Rhapsody” படத்தில் நடித்த  37 வயதான “Rami malek” க்கு வழங்கப்பட்டது. இதில் அவர் புகழ்பெற்ற மேடைப் பாடகரான “Freddie Mercury” அவர்களை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்திருந்தார்.

இங்கிலாந்து ராணியாக இருந்த “queen Anne” அவர்கள் வாழ்க்கையை மையப்படுத்திய “The favourite” திரைப்படத்தில் குயின் அன்னியாக நடித்த  45 வயதான “oliviya Coleman” சிறந்த நடிகைக்கைகான விருதைப் பெற்றார்.

சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகையர்

If beals street could talk படத்தில் நடித்த Regina king அவர்கள் சிறந்த குணச்சித்திர துணை நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த மேக் அப் கலைஞர்

பேட்மேன் நாயகன் Christian bale நடித்த நகைச்சுவை படமான “ vice “ படத்தில் பணியாற்றிய  ஒப்பனையாளர்களுக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்பட்டது.

 

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆஸ்கார் விழாவில்  கலந்துகொண்ட பார்வையாளர்கள் குறைவே. 2015 ஆம் ஆண்டு எழுந்த புரட்சியான #oscarSowhite டிற்கு பிறகு (கருப்பினத்தவர் ஆஸ்கார் உறுப்பினராக தடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு ) இந்த ஆண்டும் சலசலப்புக்கு பஞ்சமில்லை.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!