திரையுலகின் மிக முக்கிய அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படுகிறது. உலகமெங்கிலும் எடுக்கப்படும் பல்வேறு மொழிப்படங்கள் இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டு பின்னர் இறுதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி 24-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவிலிருந்து Period. End of Sentence. என்னும் குறும்படமும் சிறந்த குறும்படங்களுக்கான பட்டியலில் இருக்கிறது.

முதல் சாதனை
8 படங்கள் சிறந்த படங்களுக்கான தேர்வில் மோதுகின்றன. இந்தப் பிரிவில் முதல் சாதனையாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ரோமா’ (Roma) என்ற படம் சிறந்த படத் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து, இணையதளத்தில் வெளியான ரோமா படம் ஏராளமான மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்காரில் பரிந்துரைக்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒருவாரமாவது அந்தத் திரைப்படம் திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆஸ்கார் விருதை குறிவைத்தே ரோமா படம் திரையங்கத்தில் வெளியிடப்பட்டது. நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் படம் திரைக்கு வருவதும் இதுவே முதல்முறை. 10 பிரிவுகளின் கீழ் இந்தப்படம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் ரோமா திரைப்படக்குழு நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருக்கிறது. மற்றொரு சிறந்த படமாகக் கருதப்படும் ‘தி பேவரிட்’ (The Favourite) படமும் 10 ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறது. சூப்பர் ஹீரோ திரைப்படமான ப்ளாக் பேந்தரும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் சுப்பர் ஹீரோ திரைப்படம் ப்ளாக் பேந்தர் தான். இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு விடையளிக்கக் காத்திருக்கிறது இந்த வருட ஆஸ்கார். சரி, எந்தெந்த பிரிவுகளில் எந்தெந்த படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்ப்போம்.
சிறந்த படம்
துணை நடிகை
துணை நடிகர்
அயல் மொழிப்படம்
ஆவணப்படம் (குறும்படம்)
ஆவணப்படம்
சிறந்த பாடல்
அனிமேஷன் படம்
சிறந்த தழுவல் திரைக்கதை
சிறந்த திரைக்கதை
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த இயக்குனர்
சிறந்த வடிவமைப்பு
சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஆடை வடிவமைப்பு
சிறந்த ஒலிக்கோர்வை
சிறந்த ஒலிக்கலவை
சிறந்த அனிமேஷன் படம் (குறும்படம்)
சிறந்த நேரிடி நடிப்புக் குறும்படம்
சிறந்த மூல ஒலி
சிறந்த விஷுவல் எஃபெக்ட்
சிறந்த எடிட்டிங்
சிறந்த அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம்