ரஜினியின் தர்பார் படத்தில் வில்லன் இவர்தான்!!

0
275
darbar

ஏ,ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகிக்கு பின்னர் கமிட் ஆகியிருக்கிறார் நயன்தாரா. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த போதே ரஜினி ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். ஆனால் படத்தில் வில்லன் தேர்வு ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். பாலிவுட் நடிகரான பிரதீக் பாபர் ரஜினியின் தர்பாருக்கு வில்லனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

darbarவில்லன்

ரஜினிக்கான மாஸ், ஸ்டைல் என்பது பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வில்லன்கள் மிக அவசியம். தேர்ந்த நடிப்பு, ஹீரோவிற்கு இணையான வசனங்கள் இருக்கும் பட்சத்தில் படத்தில் விறுவிறுப்பு அதிகமாகும். தமிழில் ரஜினிக்கு இணையான வில்லன் என்பதெல்லாம் ரகுவரன் காலத்தோடு முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். சமீபத்திய படங்கள் அனைத்திலும் பாலிவுட்டில் இருந்தே நடிகர்கள் ரஜினியின் படத்தில் வில்லன்களாக வந்திருக்கிறார்கள். டேனி, நானா படேகர், அக்‌ஷய் குமார், நவாஸுதீன் சித்திக் ஆகியோரது நடிப்பும் ரஜினியின் ட்ரேட் மார்க்கை வேற லெவலில் ஏற்றிவிட்டது.

பிரதீக் பாபர்

தேசிய விருதுபெற்ற நடிகையான ஸ்மிதா பாட்டீல், ராஜ்பப்பர் தம்பதியின் மகனான பாபர் 2008ல் ‘ஜானே தூ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அமீர் கான் தயாரிப்பில் வெளியான தோபி காட்,  தம் மாரோ தம், மை ஃப்ரண்ட் பிண்டோ என பல ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் பாபர் இதுவரை பிறமொழிப்படங்கள் எதிலும் நடித்ததில்லை. அவரது ஹிந்தி அல்லாத முதல் படம் தர்பார் தான்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” ரஜினி போன்ற ஒரு சகாப்த நடிகரோடு இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலாக உள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் பாபர். dharbar

“காலா” விட்ட இடத்தை “காளியாகப்” பிடித்து இது என்றைக்கும் ஜெயிக்கிற குதிரை என்று நிரூபித்தார் ரஜினி. அந்த வரிசையில் முருகதாஸ், லைகா, நயன்தாரா, சந்தோஷ் சிவன், அனிருத் என பெரிய பட்டாளமே இந்தப்படத்தில் களம் காண்கிறது. பொங்கலுக்கு வர இருக்கும் இந்தப்படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பேர் விவாதித்துக்கொண்டு இருக்கின்றனர்.