கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் மனதைக் கவர்ந்த அந்த 5 திரைப்படங்கள்!!

Date:

சிறந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் மற்றும் BAFTA விருதுகளுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள். இது 1946 ஆம் ஆண்டு பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும்  “Big Three” என்று அழைக்கப்படும் வெனிஸ் நகர திரைப்பட விழா (Venice film festival) மற்றும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழா (Berlin international film festival) ஆகியவற்றுள் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

cannes-lions-international-festival-of-creativity-cannes
Credit: SeeCannes.com

கேன்ஸ் -2019 விழாவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இயக்குனர்களும் அவர்களது படைப்புகளும் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறந்த படமாக கொரிய இயக்குனர் Bong Joon-ho இயக்கிய Parasite திரைப்படம் வெற்றிக்கனியை ருசித்தது. நடுவர்கள் உட்பட பார்வையாளர்கள் அனைவரது பாராட்டுகளையும் பெற்ற  திரைப்படங்களாவன….

டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட்

சிறந்த இயக்குனருக்கான பிரிவில் போட்டியிட்ட Quentin Dupieux இயக்கிய Deerskin திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. பிரஞ்சு நகைச்சுவை திரைப்படமான இது வெறும் ஒரு ஜாக்கெட்டை மையப்படுத்தியது.

5. Sorry we miss you

கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய விருதான Palme d’Or விருதுக்கு போட்டியிட்ட இப்படம் இங்கிலாந்தில் வாழும் ஒரு சராசரி கால் டாக்ஸி ஊழியரின் குடும்ப வாழ்க்கையை பற்றியது.

4. A hidden life

 ஆஸ்திரியாவைச் சேர்ந்த  St. Franz Jägerstätter என்பவர் நாஜிக்களின் சார்பாக யூதர்களை எதிர்த்து போரிட அனுப்பப்பட்டார். ஆனால் போரில் ஈடுபட மறுத்த  அவரை நாஜிக்கள் என்ன செய்தார்கள்  என்பதே இக்காவியமாகும். வெகுவான கைதட்டல்களைப் பெற்றது இத்திரைப்படம்.

film festivel
Credit: Yacht Charter Fleet

3. A portrait of a lady on

வரலாற்று காதல் திரைப்படமான இது பதினெட்டாம் நூற்றாண்டில் வாழும் ஒரு பெண் ஓவியரைப் பற்றியது. ஒரு திருமணத்திற்காக மணப்பெண் ஒருவரை  ஓவியம் தீட்ட இவர் படும் பாட்டை பற்றி  இக்கதை அமைந்துள்ளது.

2. The lighthouse

டிவைலைட் சாகா புகழ் Robert pattinson நடித்துள்ள கருப்பு வெள்ளைத் திரைப்படமான இது லைட் ஹவுஸ் ஒன்றின் திகில் பிண்ணனி பற்றிய படமாகும். போட்டிப் படமாக இல்லாமல் வெறும் இயக்குனர்களின் பார்வைக்கு மட்டும் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது.

1.parasite

நிச்சயமாக ஒரு பிரம்மிக்க வைக்கும் படமாக அமைந்துபோனது பாராசைட். கொரிய மொழிப் படமான இது இன்னும் உலகளவில் திரையிடப்படவில்லை. ஆனாலும் உலகளவில் பெருத்த எதிர்பார்ப்புகளை எழுப்பிவிட்டுள்ளது இந்த திகில் திரைப்படம். உயரிய விருதான Palme d’Or விருதைப் இயக்குனர் bong join ho விற்கு பெற்றுத்தந்தது.

வெற்றிப்பெற்றவர்களின் முழுப் பட்டியல்

Palme d’Or ( உயரிய விருது): Parasite, Bong Joon-ho

Grand Prix (இரண்டாவது உயரிய விருது):  Atlantics, Mati Diop

Jury Prize (tie) (நடுவர் விருது) : Les Misérables, Ladj Ly, and Bacurau, Kleber Mendonça Filho, Juliano Dornelles

Best Actress: Emily Beecham, Little Joe

Best Actor: Antonio Banderas, Pain & Glory

Best Director: Jean-Pierre & Luc Dardenne, The Young Ahmed

Best Screenplay: Céline Sciamma, Portrait of a Lady on Fire

Special Mention of the Jury: It Must Be Heaven, Elia Suleiman

Camera d’Or: Our Mothers, César Díaz

Short Film Palme d’Or (குறும்படத்திற்கான  உயரிய விருது) : Thence Between Us And The Sky, Vasilis Kekatos

Special Mention of the Jury: Monstruo Dios, Agustina San

Queer Palm (Feature) :ஓ  Portrait of a Lady on Fire, Céline Sciamma (ஓரினச்சேர்க்கை பற்றிய படங்களுக்கு வழங்கப்படும் விருது.)

Queer Palm (Short)  : The Distance Between Us And The Sky, Vasilis Kekatos (ஓரினச்சேர்க்கை பற்றிய குறும்படங்களுக்கு வழங்கப்படும் விருது)


Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!