டிவி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்பாத இந்தியர்கள்

0
41

உலக அளவில் இந்தியர்களின் ஆண்ட்ராய்டு கைபேசிப்  பயன்பாடு அதிகரித்து வருகின்றது. மேலும், இதற்கு ஏற்றார் போல் தற்போதைய தலைமுறையினர் அனைவரும் சூப்பர் ஹைவே எனப்படும் அதிவேகத் தகவல் தொடர்பு முறைக்கு மாறி வருகின்றனர்.

இந்தியாவில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகமான மக்கள் இணையத்தில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது என்று அதிர்ச்சி அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் செய்தி, பொழுதுபோக்கு, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான யூடியூப் சேனல்களும் இருக்கின்றன.

tv programs in onlineஇந்தச் சேனல்களில் பல்வேறு தரப்பினருக்கும் பிடித்தமான வகையில் நிகழ்ச்சிகளை நேரலையாகவும், யூடியூப்-களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றது. மேலும், இந்திய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்பதாலும் ஏராளமான தொலைக்காட்சிப் பிரியர்களும், நிகழ்ச்சி பிரியர்களும் இவற்றைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தொலைபேசி சந்தை

இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனங்களும் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியா கைபேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் சந்தையாக இருக்கிறது. மேலும், வை-பை சேவை மற்றும் இணைதள சேவைகளையும் இந்தியா அதிமாக பயன்படுத்தி வருகின்றது. இதில் ஏராளமானோர் பல்வேறு நிகழ்ச்சிகளை இணையம் வழியாகக் கண்டு மகிழ்கின்றனர்.

உலக சராசரியை விட அதிகம்

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த லைம்லைட் நெட்வொர்க் எனும் ஆய்வு நிறுவனம் இது குறித்து ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் எவ்வாறு நிழச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் கண்டு மகிழ்கின்றன எனத் தன் ஆய்வைத் துவங்கியது.

இந்தியர்கள் இணைதள நிகழ்ச்சிகளைப் பார்க்கும் விகிதம், உலக சராசரியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த ஆய்வின் அறிக்கையில், 2016 – ஆம் ஆண்டை விட தற்போது மிக அதிக இந்தியர்கள் இணைதள நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இணைதளங்களில் திரைப்படம் முதலிடம்

இணைதளங்களில் திரைப்படங்களையும், அதற்கு அடுத்ததாக செய்திகள், தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.