இணையதள சூதாட்டம் இந்தியாவில் சட்டபூர்வமானதா?

0
55

பொதுவான ஒரு அறை அல்லது கட்டிடத்தில் எந்த ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டும் இல்லாமல் பணம் வைத்து விளையாடுவது கேஸினோ (Casino) எனும் சூதாட்ட விளையாட்டாகும். இன்றைய இணையதள உலகில் இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் ஏராளமாக வந்து விட்டன. எனவே, ஒரு இடத்திற்குச் சென்று விளையாடுவதை ஆன்லைனிலேயே விளையாடலாம் என்று கூறுகின்றனர்.

அதே நேரம் இந்தியாவில் சில இடங்களைத் தவிரப் பிற இடங்களில் கேஸினோ விளையாடத் தடை உள்ளது. எனவே இது குறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் ஆன்லைன் கேஸினோ சட்டப்பூர்வமானதா?

இந்தியாவில் பொது இடத்தில் பெட்டிங் அல்லது சூதாட்டம் விளையாடுவது சட்டப்பூர்வமானது இல்லை. பொதுச் சூதாட்டச் சட்டத்தின்படி, இந்தியாவில் எந்த விதமான சூதாட்டமும் சட்டப்பூர்வமானது அல்ல. ஆனால், அதில் ஆன்லைன் பெட்டிங் இன்னும் சேர்க்கப்படவில்லை.

கூடுதல் சூதாட்ட வருமான வரிச் சட்டம் 2000 – த்தின் கீழ் சில மாநிலங்களில் சூதாட்டம் சட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெட் வைத்தல் மற்றும் கேஸினோ விளையாடுதல் போன்றவற்றுக்குச் சிக்கிம் அரசு அனுமதி அளிக்கிறது. கோவாவில் சட்டரீதியான கேஸினோக்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் 13 மாநிலங்களில் லாட்டரியும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் கேஸினோக்கள்

சிக்கிமில் கேஸினோ சிக்கும் மற்றும் கேஸினோ மஹ்ஜாங் என்று இரண்டு உள்ளன. கோவாவில் 10 கேஸினோக்கள் உள்ளன. அதில் 4 கேஸினோக்கள் கப்பல்களில் செயல்படுபவனவாகும். டாமன் மற்றும் டையூவைப் பொருத்தவரையில் 5 நட்சத்திர ஓட்டல்களில் கேஸினோ விளையாட்டுக்களை நடத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவது குறித்து முறையான சட்டங்கள் இல்லை என்றாலும், 2009 – ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான சூதாட்டத்திற்கு  90,000 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது.

விர்ச்சுவல் கேஸினோ

ஆன்லைன் கேஸினோக்கள் தான் விர்ச்சுவல் கேஸினோ (Virtual Casino) என்று அழைக்கப்படுகின்றன. பொது இடத்தில் சூதாட்டம் ஆடத்  தடை உள்ளதில் இருந்து தப்பிக்கவே இந்த விர்ச்சுவல் சூதாட்ட முறை பயன்பாட்டிற்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்தியாவில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் சட்டப்பூர்வமானது.

சூதாட்டம் மற்றும் கேஸினோ உள்ளிட்டவை இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. அதே நேரம் அறிவுப்பூர்வமான விளையாட்டுகளுக்கு அந்த விதி பொருந்தாது. எனவே, போக்கர் (Poker) விளையாட்டை மகிழ்ச்சிக்காக விளையாடும் போது அது சட்டப்பூர்வமானதாக உள்ளது.

இந்தியாவில் ரம்மி விளையாடுவதும் சட்டப்பூர்வமானதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்தியாவில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் சட்டப்பூர்வமானது. ரம்மி திறன் அடிப்படையிலான விளையாட்டுப் பட்டியலில் உள்ளது. எனவே இது சூதாட்டம் கிடையாது.

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் கோழிச் சண்டை, பறவைகள் சண்டை உள்ளிட்டவை மூலம் சூதாட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போது, இதுவே பல விதிமுறைகளுக்கு உட்பட்டுக் காவல் துறை அனுமதியுடன் சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டிலும் சூதாட்டத்திற்குத் தடை உள்ளது.

ஆனால், டெல்லியில் ஆன்லைன் கேஸினோ மூலமாகத் திறன் அடிப்படையில் இல்லாமல் வாய்ப்புகள் அடிப்படையில் சூதாட்டம் நடைபெறுவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.