உடல்நலம் என்பது உடல் மற்றும் மனது என்ற இரண்டு இணைந்தது. உடல் நலத்திற்காக நாம் உண்ணும் சத்தான உணவும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், ஜிம், விளையாட்டு என பலவகையில் உண்டு.
ஆனால், உடலுக்கு அவ்வப்போது சுறுசுறுப்பான செயலைச் செய்வது போல் மூளைக்கும் அவ்வப்போது திறமையான பயிற்சி கொடுப்பது அவசியம்.
மூளையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க அவ்வப்போது யோகா, தியானம் ஆகியவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது நலம் தான். ஆனாலும், மூளையில் உள்ள நியூரான்களைத் தட்டி எழுப்ப ஒரு சில கேம்களை (Games) நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இவ்வகை கேம்களை யோசித்து விளையாடுவதன் மூலம் மூளைக்கு வேலை தருவதோடு சட்டென முடிவு எடுக்கும் ஒரு தன்மையும் பழக்கப்பட்டு விடும்
இந்நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் பல கேம்ஸ்களை நமது ஆராய்ச்சியாளர்கள் நமக்காக உருவாக்கியுள்ளனர். அந்த வகை கேம்ஸ்களை விளையாடி மூளைக்கு வேலை கொடுக்க வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும். இனி ஐந்து முக்கிய வேலை ஸ்மார்ட்போன் கேம்ஸ் குறித்து பார்ப்போம்
எலிவேட் பிரெய்ன் டிரைனிங் (Elevate brain training )
இந்த கேம் விளையாடும்போது உங்களுடைய தகவல் தொடர்பு துறை மேம்படுவது மட்டுமின்றி விரைவில் முடிவெடுக்கும் பழக்கம் தன்னாலே வந்துவிடும். முப்பதுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான கேம்கள் உள்ள இந்த செயலி மூலம் உங்களுடைய இலக்கணம், சொல் திறமை, ஞாபகத்திறன் மற்றும் கணித அறிவு ஆகியவை மேம்பட வாய்ப்பு உள்ளது.
லூமோசிட்டி (Lumosity)
உலகம் முழுவதும் சுமார் 5 மில்லியன் மக்கள் தினந்தோறும் விளையாடும் ஒரு ஸ்மார்ட்கேம் தான் லூமோசிட்டி. நியூரோ விஞ்ஞானிகள் மிகச்சிறப்பாக இந்த அப்ளிகேசனில் சுமார் 40 கேம்ஸ் வரை டிசைன் செய்து வைத்துள்ளனர். இதில் உள்ள ஒவ்வொரு கேமும் மூளைக்கு வேலை தருவதாகவும், சிந்திக்க வைக்கும் திறனை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஞாபசக்தியை அதிகரிக்கும் தன்மை, மூளை சுறுசுறுப்பு, விரைவாக முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொடுக்கும், மூளை நரம்புகளை தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ள இந்த விளையாட்டுக்களில் நீங்கள் எடுத்துள்ள புள்ளிகள், ரிசல்ட் மற்றும் கிராப் ஆகியவற்றின் மூலம் நீங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நியூரோ நேஷன் பிரைன் டிரைனிங்( Neuro Nation Brain Training)
அடுத்து நாம் பார்க்க இருப்பது நியூரோ நேஷன் பிரைன் டிரைனிங். இந்த அப்ளிகேசனில் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 60 புரோக்ராம்களை அமைத்துள்ளனர். எண்கள் விளையாட்டு, மெமரி விளையாட்டு, ஆகியவை உள்பட பல அம்சங்களுடன் இந்த விளையாட்டுக்கள் இருக்கும். இந்த விளையாட்டுக்களை விளையாடுவது கொஞ்சம் கடினம் என்பதால் இதற்குப் பயிற்சி அவசியம். இதனால் பயிற்சிக்கென தனியாக ஒரு ஆப்சன் இதில் உள்ளது. பயிற்சியை முடித்த பின்னர் நீங்கள் மெயின் விளையாட்டுக்குச் செல்லலாம்.
கணித டிரிக்குகள் (Maths Tricks)
உங்களுக்கு கணிதத்தில் விருப்பம் இருந்து கணிதம் சம்பந்தப்பட்ட விளையாட்டில் மேதை என்றால் இந்த அப்ளிகேசன் உங்களுக்குச் சரியானதாக இருக்கும்.எண்கள், சிக்கலான கால்குலேஷன்கள் ஆகியவையும், அதோடு டிரிக்குடன் கூடிய கணிதமும் எண்ணற்ற வகையில் இந்த அப்ளிகேசனில் குவிந்துள்ளது.
ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… – தமிழர்கள் மறந்து போன பழைய விளையாட்டுகள்
இந்த விளையாட்டுக்களை நீங்கள் அடிக்கடி பயிற்சி செய்தால் உங்களுடைய நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த அப்ளிகேசனிலும் டிரைனிங் ஆப்சன் உண்டு. ஒவ்வொரு விளையாட்டிலும் உள்ள பயிற்சியை நீங்கள் 15 வினாடிகளுக்குள் முடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் மெயின் விளையாட்டுக்கு செல்ல தகுதி படைத்தவர் ஆவீர்கள்.
மூளை போர் விளையாட்டை பற்றி தெரியுமா? (Brain War)
மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமின்றி மூளையை எந்த நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பயிற்சியை இந்த பிரெய்ன் வார் கேம் உங்களுக்கு ஏற்படுத்தும். இந்த அப்ளிகேசனில் பத்து கேம்கள் உள்ளன.
கணிதம், செயல்திறன், உடனடி முடிவெடுக்கும் திறன், ஞாபகசக்தி, ஆகியவை இந்த கேமின் சிறப்பு அம்சங்கள். ஒவ்வொரு கேமும் 20 முதல் 50 வினாடிகளுக்குள் முடிந்து விடுவதால் அதிக சுவாரஸ்யமும் இதில் இருக்கும். மேலும், ஆன்லைன் மூலம் நீங்கள் இந்த கேம்களை யாரிடம் வேண்டுமானாலும் போட்டி போட்டு விளையாடலாம். உங்கள் அறிவு திறனை உலகுக்கு வெளிக்காட்ட இந்த அப்ளிகேசன் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.