சாப்பிட எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் கடலுக்கடியில், அடர் நீல நிறத்தையும் கடல் மீன்களையும் பார்த்துக்கொண்டே சாப்பிட முடிந்தால் எப்படி இருக்கும்? இது எதுவோ மாயாஜால நாவலில் வரும் அத்தியாயம் போல் இருக்கிறதா? நார்வேயில் இதை உண்மையாகும் முனைப்பில் அதிதீவிரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய உணவகம் ஒன்றை கடலுக்கடியில் கட்டிக்கொண்டிருக்கிறது அந்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம்.

கடலில் பாதி கரையில் பாதி
110 அடி நீளமும் 5,300 சதுர அடி பரப்பும் கொண்ட இந்த உணவகம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தன் சேவையைத் தொடங்க இருக்கிறது. உணவகத்தின் ஒருபாதி மூழ்கிய நிலையிலும் மீதிப்பாதி வெளியே இருக்கும்படியும் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நார்வேயின் தென்கோடிக் கடல் பகுதியில் இந்த உணவு விடுதி அமைய இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த உணவகத்தின் பெயர் UNDER ஆம்.
மீண்டும் கடலில் மிதக்க இருக்கும் டைட்டானிக்
சிரிக்க வைக்கும் சிரிப்பு வாயு
கடந்த ஆறுமாத காலமாக உணவகத்தின் கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடம் கடலிலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர் ராட்சத கிரேன்கள் மூலமாக கடலுக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் போலவே தண்ணீரை அடைப்பதன் மூலம் ஒரு பாதி கடலுக்கும் மூழ்குமாறு செய்கிறார்கள்.
கொந்தளிக்கும் கடல்
நார்வேயின் கடற்கரைகள் சீற்றம் மிகுந்தவை. அலைகளின் வேகம் அதிகம் என்பதால் உணவக வடிவமைப்பில் அதற்கென பிரத்யேக பாதுகாப்புத் திட்டங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கென கடலில் இருக்கும் பகுதியை சற்றே வளைவாக கட்டியிருக்கிறார்கள். கான்கிரீட் சுவர்கள் 1.6 மீட்டர் அளவிற்கு தடிமனாகக் கட்டப்பட்டுள்ளன. அக்கடல் பகுதியில் வீசும் காற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விடப்பட்ட சவால் தான். செயற்கை நூல்களைக்கொண்ட அக்ரிலிக் பூச்சு சுவர்களில் பூசப்படுகிறது.

கடலுக்கடியில் இருக்கும் உணவகத்தின் விளக்குகளினால் ஏற்படும் அதீத வெளிச்சத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு ஏற்படாத வகையில் சிறப்பு வெளிச்ச விளக்குகள் பயன்படுத்தப்பட உள்ளன. இது குறைவான ஒளியை மட்டுமே உணவகத்திற்கு வெளியே சிதறடிக்கும். இதனால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு எவ்வித பிரச்சனையும் வராது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். தொலைக்காட்சி போல 36 அடி திரை போன்று கடலை அதனடியிலேயே இருந்து பார்த்து ரசிக்க பலபேர் காத்திருக்கிறார்கள்.